Sunday, October 29, 2023

தொடரும் இந்திய அரசின் இராஜதந்திர தோல்விகள்!

•தொடரும் இந்திய அரசின் இராஜதந்திர தோல்விகள்! என்றுமில்லாதவாறு தனது அண்டை நாடுகளான உறவில் மட்டுமன்றி உலகில் பல நாடுகளுடன் உறவில் பெரும் பின்னடைவை இந்தியா சந்தித்துள்ளது. இது பிரதமர் மோடி அரசின் பெரும் இராஜதந்திர தோல்வியாக காட்டப்படுகிறது. மாலைதீவின் புதிய ஜனாதிபதி “ஒரு இந்திய ராணுவ வீரர்கூட தன் நாட்டில் இருக்க அனுமதிக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பில் இருக்கும் பூட்டான் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. மிக முக்கிய பாதுகாப்பு பிரதேசமாக கருதப்படும் சிக்கன் நெக் ( கோழிக் கழுத்து) பகுதியை சீனாவுக்கு வழங்க பூட்டான் சம்மதம் தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளில் இலங்கை அரசுதான் இந்தியாவுக்கு ஆதரவான நாடு என கருதப்பட்டது. இந்திய உதவிகளை பெருமளவில் பெற்று வருகிறது இலங்கை அரசு. ஆனால் இப்போது அந்த இலங்கை அரசு இந்திய அரசின் வேண்டுகோளுக்கு எதிராக சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளது. கனடாவில் சீக்கிய தலைவர் ஒருவரை கொன்றமையினால் கனடாவுக்கும் இந்தியாவிற்குமான உறவு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இப்போது கர்த்தார் நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் 8 இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. அது பற்றி இதுவரை வாய் திறக்காத இந்திய பிரதமர் மோடி பாலஸ்தீன பிரச்சனையில் இஸ்ரவேலுக்கு ஆதரவு தெரிவித்தார். முஸ்லிம் நாடுகள் பெற்றோல் தர முடியாது என்று எச்சரித்ததும் அடுத்த நாள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்று அறிக்கை விடுத்தார். வேறு எந்த இந்திய பிரதமரும் இப்படி ஒரு நாளில் பல்டி அடிக்கவில்லை என்ற பெருமையை பெற்றுள்ளார் பிரதமர் மோடி.

No comments:

Post a Comment