Sunday, October 29, 2023

கல்வியைக் கொடுப்பது கலைமகள்

“கல்வியைக் கொடுப்பது கலைமகள் எனில் இன்னமும் கைநாட்டுக்காரர் இருப்பது ஏன்?” “கலைமகள் உறைவது பிரமா நாவில் எனில் அவள் மல சலம் கழிவது எங்கே?” 1978ல் நவராத்திரி விழாவின்போது நெல்லியடி மத்திய சந்தை சுவரில் நாம் ஒட்டிய சுவரொட்டிகள் இவை. ஒவ்வொரு நவராத்திரி விழாவின்போதும் நெல்லியடி காளிகோவிலில் பட்டி மன்றம் சிறப்பாக நடக்கும். கல்வியா? செல்வமா? வீரமா? என்ற தலைப்பில் புகழ் பெற்ற பேச்சாளர்கள் பேசுவார்கள். அந்த காலத்தில் நெல்லியடியில் சண் தலைமையிலான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியினர் அதிக அளவில் இருந்தனர். அவர்கள்தான் இந்த போஸ்டரை ஒட்டியிருக்க வேண்டும் என நினைத்து பேசிய பேச்சாளர்கள் அனைவரும் அவர்களை வறுத்தெடுத்தனர். திட்டித் தீர்த்தனர். நாம் பயத்தில் வாய் திறக்காமல் பேசாமல் இருந்துவிட்டோம்.😂

No comments:

Post a Comment