Friday, October 20, 2023

தோழர் இளங்கோவை நினைவு கூர்வோம்

•தோழர் இளங்கோவை நினைவு கூர்வோம் 1991ம் ஆண்டு மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை ஈழத் தமிழர் தங்கவேலாயுதம் சிறை அதிகாரிகளால் மிகவும் தாக்கப்பட்டார். தங்கவேலாயுதத்திற்கு சிகிச்சை அளிக்கக்கோரியும் தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாம் உண்ணாவிரதம் இருந்தோம். அப்போது என்னைப் பார்வையிடுவதற்கு தோழர் இளங்கோ கரூரில் இருந்து வந்திருந்தார். நான் உண்ணாவிரதத்தில் இருந்தமையினால் சிறை விதிகளின்படி என்னை பார்வையிட அவர் அனுமதிக்கப்படவில்லை. தோழர் இளங்கோ ஏற்கனவே சிறையில் இருந்தமையினால் அனுமதி மறுக்கப்பட்டதும் ஏதோ பிரச்சனை உள்ளே நடந்துள்ளது என்பதை ஊகித்துவிட்டார். பதட்டமடைந்த தோழர் இளங்கோ இது பற்றி யாரிடமோ விசாரித்தபோது நான் தாக்கப்பட்டதாக கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த தோழர் இளங்கோ அப்போது மனு அதிகாரியாக இருந்த தமிழ்செல்வனிடம் “ எமது தோழர் பாலனுக்கு ஏதும் நடந்தால் அப்புறம் மதுரை சிறையே இருக்காது குண்டு வீசி தரை மட்டமாக்குவேன்” என மிரட்டியுள்ளார். தோழர் இளங்கோ மீது ஏற்கனவே இரண்டு குண்டு வழக்குகள் இருக்கிறது என்பது அதிகாரி தமிழ்செல்வனுக்கு தெரியும். அதனால் பயந்த அதிகாரி தமிழ்ச்செல்வன் உடனே உள்ளே வந்து என்னிடம் நடந்ததைக்கூறி நான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டால் இளங்கோவை பார்வையிட அனுமதிப்பதாக கூறினார். உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்த நான் இளங்கோ கொடுத்த மனுப் பேப்பரின் பின்புறத்தில் நான் நலமாக இருக்கிறேன் எனவும் அடுத்த வாரம் நீதிமன்றம் வரும்போது நேரில் யாவும் கூறுகின்றேன் என எழுதிக் கொடுத்தேன். என் எழுத்தைப் பார்த்தபின்பே தோழர் இளங்கோ ஆறுதல் அடைந்திருந்தார். இதேபோன்று துறையூர் சிறப்புமுகாமில் நான் உண்ணாவிரதம் இருந்தபோது காஞ்சிபுரத்தில் இருந்து வந்து திருச்சி கலெக்டரின் வாசலில் உட்கார்ந்து குரல் கொடுத்தவர் தோழர் முகிலன். ராஜீவ் காந்தி கொலையின் பின் தமிழகத்தில் ஈழத் தமிழருக்காக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம் அது. அதற்கு அஞசாது எனக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்தவர்கள் இளங்கோ, முகிலன் மற்றும் பல தோழர்கள

No comments:

Post a Comment