Saturday, December 31, 2016

சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்தபடி தீர்வு கிடைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கிறது!

சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்தபடி தீர்வு கிடைக்க
இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கிறது!
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி பற்றியே கூறப்பட்டிருந்தது.
அந்த தீர்வை இந்த வருட இறுதிக்குள் பெற்று தருவதாக சம்பந்தர் அய்யா வாக்குறுதி அளித்திருந்திருந்தார்.
சம்பந்தர் அய்யா அளித்த வாக்குறுதியின்படி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்வையும் எற்றுக்கொள்ள மாட்டோம் என சம்பந்தர் அய்யா நேற்று முன்தினம் கூறியுள்ளார்.
நாடு ஒன்றாக இருக்க இணங்கினோமே தவிர ஒற்றையாட்சிக்குள் கிடைக்கும் தீர்வை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என சுமந்திரன் உறுதியாக கூறியுள்ளார்.
ஒற்றையாட்சியா? சமஸ்டியா? என்பது அரசியலமைப்பில் பாரிய பிரச்சனை இல்லை என்று பிரதமர் ரணில் இந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.
ஒற்றையாட்சிக்குள் தீர்வுக்கு சம்பந்தர் அய்யா இணங்கியுள்ளதாக அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் சம்பந்தர் அய்யா முன்னிலையில் கூறியுள்ளார்.
ஆனால் அமைச்சரின் கூற்றை சம்பந்தர் அய்யா இதுவரையில் மறுக்கவில்லை. அவர் எப்பொதும்போல நீண்ட உறக்கத்தில் இருக்கிறார்.
சம்பந்தர் அய்யாவுக்கு மட்டுமல்ல தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தீர்வு குறித்து பதில் சொல்ல வேண்டிய தார்மீக கடமை உள்ளது.
ஏனெனில் ஒரு வருடத்திற்கள் தீர்வு பெற்று தருவோம் என மக்களிடம் வாக்குறுதி அளித்தே இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
எனவே இவர்கள் கூறியபடி இன்னும் 2 நாட்களில் தீர்வு பெற்றுத் தரவில்லை என்றால் அதுகுறித்து மக்களுக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்.
மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் மாறாக மக்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார்கள். குறிப்பாக முகநூலில் தங்களுக்கு எதிராக எழுதுபவர்களை பொலிசிடம் காட்டிக் கொடுக்கிறார்கள்.
முகநூலில் தமக்கு எதிராக பதிவுகள் எழுதுகின்றனர் என்று நான்கு இளைஞர்களை எம்.பி .சிவமோகன் முல்லைதீவு பொலிசிடம் காட்டிக் கொடுத்துள்ளார்.
மக்களிடம் வாக்கு பெற்று பதவி பெற்றவர்கள் இப்போது மக்களை மிரட்டவும் மக்களை காட்டிக் கொடுக்கவும் முற்படுகின்றார்கள்.
சிங்கள் பொலிசின் பாதுகாப்பு பதவி இருக்கும்வரைதான் என்பதையும் அடுத்த தேர்தலுக்கு மீண்டும் மக்கள் முன் வரவேண்டும் என்பதையும் இவர்கள் மறந்து விடுகின்றனர்.
காலம் மாறும். காட்சிகள் மாறும். அப்போது பதவி பறிபோகும். சொகுசு வாகனம் பறிபோகும். சம்பாதித்த சொத்து எதுவும் அனபவிக்க முடியாமல் போகும்.
கடந்த கால வரலாற்றi கொஞ்சம் திரும்பிப் பார்த்து இனியாவது மக்களுக்கு உண்மையாக நடக்க முயற்சி செய்யுங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களே!

No comments:

Post a Comment