Saturday, December 31, 2016

•“இந்தியாவுக்கு தலை வணங்க முடியாது” ஒரு அதிகாரிக்கு இருக்கும் உணர்வுகூட தலைவர்களுக்கு இல்லை!

•“இந்தியாவுக்கு தலை வணங்க முடியாது”
ஒரு அதிகாரிக்கு இருக்கும் உணர்வுகூட தலைவர்களுக்கு இல்லை!
திருகோணமலையில் 650 எக்கர் நிலம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் என்ன நடக்கிறது என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட சென்று பார்வையிடமுடியாது.
இதனை எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” என்னும் நூலில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
இப்போது அதனை நிரூபிக்கும் வண்ணம் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதத்தை பார்வையிடுவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் சிலர் சென்றுள்ளனர்.
அவ்வாறு சென்ற இலங்கை அதிகாரிகளை அங்கிருந்த இந்திய எண்ணெய்வள அதிகாரிகள் பார்வையிட அனுமதிக்காதது மட்டுமன்றி அவர்களை சிறை பிடித்துள்ளனர்.
இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுதாபன தலைவர் ஜெயசிங்க இலங்கை அரசைக் கோரியுள்ளார்.
இலங்கை அரசானது இந்திய அரசுக்கு பயந்து எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது.
தனது கோரிக்கைக்கு எந்தவித பதிலும் இதுவரை கிடைக்காததால் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் ஜெயசிங்க தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி தன்னால் இந்தியாவுக்கு தலை வணங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நாட்டின் இறைமையையும் சுயகௌரவத்தையும் விட்டுக்கொடுக்க முடியாது என்ற உணர்வு ஒரு அதிகாரிக்கு இருக்கிறது. ஆனால் நாட்டை ஆளும் அரசியல் தலைவர்களுக்கு இல்லை.
இந்தியா எமது நாட்டை ஆக்கிரமித்து ஒரு புறத்தில் காந்தி சிலைகளை நிறுவுகிறது. மறுபுறத்தில் பார்வையிடச் சென்ற இலங்கை அதிகாரிகளையே சிறை பிடிக்கிறது.
ஆனால் எமது தமிழ் தலைவர்கள் இன்னமும் இந்திய அரசை நம்பிக் காலத்தை கழித்துக்கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment