Saturday, December 31, 2016

•காந்தி சிலை வைப்பவர்கள் காந்தீயத்தை மதிக்கவில்லையே!

•காந்தி சிலை வைப்பவர்கள் காந்தீயத்தை மதிக்கவில்லையே!
திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
100 காந்தி சிலைகளை தமிழர் பகுதிகளில் நிறுவும் இந்திய அரசு உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளின் கோரிக்கையை எற்க மறுக்கிறது.
அகதிகளை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை சந்தித்து பேசக்கூட எந்தவொரு அதிகாரியையும் அரசு அனுப்பவில்லை.
காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது ஆங்கிலேய அரசு அவரை கைது செய்வோம் என மிரட்டவில்லை.
ஆனால் காந்தி சிலைகளை நிறுவும் இந்திய அரசு பொலிசாரை அனுப்பி உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளை மிரட்டுகிறது.
இந்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்றால் எமது தலைவர்களோ அதற்கு மேலாக பல வேடம் போடுகின்றார்கள்.
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இந்திய அரசு காந்தி சிலைகளை நிறுவ துணை செய்கிறார்.
ஈழ அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யுமாறு இந்த சிவமோகன் எம்.பி ஒருமுறைகூட குரல் கொடுக்கவில்லை.
அடைத்து வைக்கப்ட்டிருக்கும் அகதிகளின் விடுதலையைவிட காந்தி சிலை அமைப்பதுதான் இந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு முக்கியமாக தெரிகிறது.
5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் இறக்குமதி செய்து பவனி வருவதோடு காந்தி சிலை அமைப்பதை முக்கிய பணியாக கொண்டிருக்கிறார்.
இவருக்கு வாக்கு போட்டு எம்பி யாக தெரிவு செய்தது தமிழ் மக்கள். ஆனால் இவரோ இந்திய தூதருக்கு உதவி செய்வதையே முக்கிய பணியாக கருதுகிறார்.
மதுரை அகதிமுகாமில் தாசில்தார் தொல்லை பொறுக்காமல் 7 பிள்ளைகளின் தந்தை மின்சாரக் கம்பியில் தொங்கி தற்கொலை செய்தார்.
அகதிமுகாம்களில் அதிகாரிகளின் தொல்லையையாவது நிறுத்தும்படி இந்த எம.பி இந்திய தூதரிடம் கேட்டிருக்கலாம்.
ஆனால் அகதிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. முல்லைத்திவில் காந்தி சிலை அமைத்தே தீருவேன் என இவர் அடம் பிடிக்கிறார்.
அடுத்த தேர்தலிலும் தமிழ் மக்கள்தான் வாக்கு போடுவார்கள், இந்திய தூதர் அல்ல என்பதையாவது இவர் புரிந்துகொண்டால் சரி.

No comments:

Post a Comment