Saturday, December 31, 2016

•மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர் தலைவர் நத்தார் மரம் திறந்து வைக்கிறார்!

•மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்
தலைவர் நத்தார் மரம் திறந்து வைக்கிறார்!
காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளனர்.
அவர்கள் கிழக்கு மாகாண ஆளுனர் வாசலிலும் போராட்டம் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யா இவர்களின் போராட்டத்தில் பங்குபற்றவில்லை. இது குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை.
மாறாக கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள உலகில் அதி உயரமான நத்தார் மரத்தை திறந்து வைக்க சென்றுள்ளார்.
யுத்தம் முடிந்து 7 வருடமாகிவிட்டது. தீர்வு பெற்று தருவதாhக கூறிய ஒரு வருட காலக்கெடுவும் முடிந்துவிட்டது. ஆனால் காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.
காந்தியையும் காந்தீயத்தையும் மதித்து சிலை வைத்ததாக கூறும் எம்.பி சிவமோகனும் இவர்களின் உண்ணாவிரத போராட்டத்தை மதித்து கலந்துகொள்ளவில்லை.
5 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்து ஓடித் திரியும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மக்களின் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
போராட்டம் வெடிக்கும் என அடிக்கடி அறிக்கைவிடும் மாவை சேனாதிராசாவும்கூட வெடித்துள்ள இந்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இவர்கள் கலந்துகொள்ளாதது மட்டுமன்றி இந்த மக்களின் போராட்டம் குறித்து எந்தவித அக்கறையும் இன்றி இருக்கின்றனர்.
இந்திய தூதுவரை திருப்திப்படுத்த அடிக்கடி அறிக்கைவிடும் இந்த தலைவர்கள் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு அறிக்கைகூட விடுவதற்கு விரும்பவில்லை.
இதனால்தான் ஆத்திரம்கொண்ட மக்கள் சம்பந்தர் அய்யாவின் உருவ படத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
சம்பந்தர் அய்யா மக்களின் ஆத்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து மக்களை மதிக்காமல் திமிராக நடந்து கொள்வேராயானால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
இன்று உருவப்படத்தை கொளுத்திய மக்கள் நாளை சம்பந்தர் அய்யாவை உயிருடன் கொளுத்தவும் தயங்கமாட்டார்கள்.
எச்சரிக்கை- மக்களுடன் விளையாட வேண்டாம் சம்பந்தர் அய்யா அவர்களே!
குறிப்பு- சம்பந்தர் அய்யா மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி நாளை தீர்வு வருமா?

No comments:

Post a Comment