Monday, December 12, 2016

•தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்!

•தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்!
இவர்கள் 1000 நாட்களாக மதுரை சிறையில் வாடுவது எதற்காக?
கடந்த 10.03.2014 யன்று கைது செய்யப்பட்ட திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின், காhத்திக் ஆகிய ஆறு தமிழ் இன உணர்வாளர்களும் 1000 நாட்களாக மதுரை சிறையில் வாடுகின்றனர்.
இவர்களுக்குரிய நீதி ஏன் மறுக்கப்படுகிறது?
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். இவர்களுக்கு கடந்த 1000 நாட்களாக நீதி வழங்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தீர்ப்பு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.
ஜாமீன் கூட வழங்கப்படாதது ஏன்?
60 கோடி ரூபா மக்கள் பணத்தை ஊழல் செய்து 4 வருட தண்டனை பெற்ற ஜெயா அம்மையார் கும்பலுக்கு 21நாட்களில் பிணை வழங்கி வரலாற்று சாதனை புரிந்துள்ளது உச்சநீதிமன்றம். ஆனால் இந்த அறுபேருக்கும் 1000 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் பிணை வழங்க நீதிமன்றம் மறுக்கிறது. இது என்ன நியாயம்?
இவர்கள் செய்த குற்றம் என்ன?
இவர்கள் ஜெயா அம்மையார் போல் மக்கள் பணத்தை ஊழல் செய்தவர்களா?
இவர்கள் கனிமொழி போல் 2ஜி ஊழல் மூலம் பணம் சேர்த்தவர்களா?
இவர்கள் காஞ்சி சங்கராச்சாரி போல் ஆள் வைத்து கொலை செய்தவர்களா?
இவர்கள் அழகிரி போல் காலையில் வாக்கிங் போனவரை கொலை செய்தவர்களா?
கொலை செய்தவன், கொள்ளையடித்தவன், ஊழல் செய்தவன் எல்லாம் வெளியில் இருக்கிறான்.
ஆனால் இந்த ஆறு பேர் மட்டும் எதற்காக சிறையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்?
இவர்கள் தமது தமிழ் இனம் அடிமைபட்டுக் கிடப்பதாக நினைத்தது தவறா?
இவர்கள் தமது தமிழ் இன விடுதலைக்காக செயற்பட முனைந்தது தவறா?
இவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சிந்தித்தது தவறா?
இவர்கள் தோழர் தமிழரசன் பாதையில் தமிழ்நாடுவிடுதலைக்காக போராடியது தவறா?
இவர்களும் மற்றவர்கள் போல் தாம் உண்டு. தம் வேலை உண்டு என்று இருந்திருக்கலாம்.
அவ்வாறு இருந்திருந்தால் இவர்கள் மட்டுமல்ல இவர்களுடைய உறவினர்களும் எவ்வித பொலிஸ் பிரச்சனையும் இன்றி நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் இவர்கள் தமது பெறுமதிமிக்க இளமைக்கால வாழ்க்கையையே தமிழ் இனத்திற்காக அர்ப்பணித்துள்ளார்கள்.
இங்கு கொடுமை என்னவென்றால் தமக்காக போராடிய இவ் இளைஞர்களை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்திய ஜெயா அம்மையாருக்கு தமிழக மக்கள் அஞ்சலி செலுத்துவது ஆகும்.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த இந்த ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று எந்தவொரு ஈழத் தலைவரும் இதுவரை கோரவில்லை. ஆனால் இவர்களை சிறையில் அடைத்த ஜெயா அம்மையாருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
நீதி மறுக்கப்ட்ட இந்த ஆறு உணர்வாளர்களும் விடுதலை பெற இனியாவது குரல் கொடுப்போம்!

No comments:

Post a Comment