•நாட்டை விற்பதில் மகிந்தவும் ரணிலும் ஒண்ணு
இதை புரியாதவங்கள் வாயில் மண்ணு!
இதை புரியாதவங்கள் வாயில் மண்ணு!
சம்பூரில் 650 ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு கொடுத்தவர் மகிந்தாவே
பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு கொடுத்தவர் மகிந்தாவே
மன்னார் பெற்றோல் கிணறை இந்தியாவுக்கு கொடுத்தவர் மகிந்தவே
காங்கேசன் சீமெந்தை இந்தியாவுக்கு கொடுத்தவர் மகிந்தாவே
காங்கேசன் துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுத்தவர் மகிந்தாவே
திரிகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு கொடுத்தவர் மகிந்தாவே
புல்மோட்டை இல்மனைற்றை இந்தியாவுக்கு கொடுத்தவர் மகிந்தாவே
இத்தனையும் இந்தியாவுக்கு கொடுத்த மகிந்தவை சீனாவின் ஆள் என்றார்கள்.
மகிந்தவை தோற்கடிக்க ரணிலுக்கு இந்தியா ஆதரவு வழங்கியது என்றார்கள்.
மகிந்த சீனாவுக்கு 750 ஏக்கர் காணியே வழங்க இருந்தார்.ஆனால் இந்தியாவின் ஆதரவு பெற்ற ரணில் 15 ஆயிரம் ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்குகிறார்.
அதுவும் சிங்கள விவசாயிகளின் விவசாயக் காணிகளை சீனாவுக்கு வழங்க சம்மதித்துள்ளார்.
1.4 பில்லியன் டாலர் முதலீட்டில் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டமும் இந்திய ஆதரவு பெற்ற ரணில் அரசு சீனாவிடம் வழங்கியுள்ளது.
கொழும்பு சர்வதேச கொள்கலன் டெர்மினல் சீனக் கம்பனியிடம் உள்ளது. இதன் 85 வீத இலாபம் அந்த கம்பனிக்கே செல்வதற்கு இந்திய ஆதரவு பெற்ற ரனில் அரசு அனுமதித்துள்ளது.
தெற்கு அதிவேக வீதி திட்டமும் மகிந்தவினால் சீனாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதை இன்றைய இந்திய ஆதரவு பெற்ற ரணில் அரசு தொடர்வதற்கு அனுமதித்துள்ளது.
இலங்கையை கொள்ளையடிப்பதில் இந்தியாவும் சீனாவும் ஒன்றுபட்டு செயற்படுகின்றன.
இலங்கையை விற்பதில் மகிந்தவும் ரணிலும் ஒன்றாகவே செயற்படுகின்றனர்.
பாவம் இலங்கை மக்கள் . இதை புரிந்துகொள்ளாமல் ஏமாந்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பு- இந்தியாவும் சீனாவும் எதிரிகள். எனவே இலங்கையை சீனா ஆக்கிரமிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று பூகோள அரசியல் சொல்லிக்கொண்டிருந்த எமது அரசியல் ஆய்வாளர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment