Saturday, December 31, 2016

பாலா அண்ணைக்கு நினைவு சின்னம் வேண்டாம் என்பவர்கள் வட கிழக்கில் காந்தி சிலை வேண்டாம் என்று ஏன் கூறவில்லை?

•பாலா அண்ணைக்கு நினைவு சின்னம் வேண்டாம் என்பவர்கள்
வட கிழக்கில் காந்தி சிலை வேண்டாம் என்று ஏன் கூறவில்லை?
போராடிய புலிகள் வறுமையில் வாடும்போது பாலா அண்ணைக்கு நினைவு சின்னம் வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள்.
ஆம். நியாயமான கேள்விதான். கேட்க வேண்டிய கேள்விதான். ஆனால் இவ்வாறு கேட்பவர்கள் காந்தி சிலை அமைக்கும்போது ஏன் மௌனமாக இருக்கின்றனர்.
இந்திய தூதரின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு எங்கும் பல காந்தி சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த காந்தி சிலை அமைக்கும் பணத்தை வறுமையில் வாடும் போராளிகளுக்கு கொடுத்து உதவும்படி ஏன் இவர்களால் கேட்க முடியவில்லை?
இங்குதான் எமக்கு சந்தேகம் வருகிறது. இவர்களுக்கு உண்மையில் போராளிகள் மீது அக்கறை உள்ளதா? அல்லது போராளிகளின் பெயரால் தமிழ் இன விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்க விரும்புகிறார்களா?
வறுமையில் வாடும் போராளிகளுக்கு உதவுங்கள் என்று எழுதுவோரின் எண்ணிக்கை வறுமையில் வாடும் போராளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது.
இவ்வாறு எழுதுவோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போராளியை தத்தெடுந்திருந்தாலே இன்று இப்படி ஒரு போராளிகள் பிரச்சனையே நம் மத்தியில் இருந்திருக்காது.
பல கோடி ரூபா செலவில் கோயில் கட்டுகிறார்கள். திருவிழா நடத்துகிறார்கள். அப்போதெல்லாம் இந்த பணத்தை போராளிகளுக்கு வழங்குங்கள் என்று இவர்கள் கேட்பதில்லை.
பல லட்சம் ரூபா செலவு செய்து இந்தியாவில் இருந்து நடிகர்களை வரவழைத்து கச்சேரிகள் செய்கிறார்கள். அப்போதெல்லாம் இந்த பணத்தை போராளிகளுக்கு வழங்குங்கள் என்று இவர்கள் கேட்பதில்லை.
பல லட்சம் ரூபா செலவு செய்து சாமத்திய சடங்கு, திருமணங்களை நடத்துகின்றனர். அவர்களிடம் இந்த பணத்தை போராளிகளுக்கு வழங்குங்கள் என்று இவர்கள் கேட்பதில்லை.
நாய்க்கு செத்த வீடு நடத்தினாலும் சரி, கெலிகப்டரில் சாமத்திய சடங்கு நடத்தினாலும் சரி, ரோட்டில தேங்காய் உடைத்து வீணாக்கினாலும் சரி இவர்கள் அவர்களிடம் ஏன் எதுவும் கேட்பதில்லை?
இத்தனைக்கும் மௌனமாக இருப்பவர்கள் தமிழ் மக்களுக்காக போராடி மாண்ட போராளிகளுக்கு நினைவு சின்னம் அமைக்கும்போது மட்டும் அந்த பணத்தை போரளிகளுக்கு வழங்கும்படி இவர்கள் கேட்பது ஏன்?
தன் முதுகில் அழுக்கு இல்லாதவன் இந்த விபச்சார பெண் மீது முதல் கல்லை எறியட்டும்- இயேசு பிரான்.

No comments:

Post a Comment