Saturday, December 31, 2016

•சம்பந்தர் அய்யாவினதும் பிரதமர் மோடியினதும் வாக்குறுதி நிறைவேற இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது!

•சம்பந்தர் அய்யாவினதும் பிரதமர் மோடியினதும் வாக்குறுதி நிறைவேற இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது!
தான் பதவிக்கு வந்ததும் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரதும் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபா வைப்பில் இடுவேன் என மோடி வாக்குறுதியளித்தார்.
ஆனால் அவர் பதிவிக்கு வந்ததும் சிவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை மீட்கவில்லை. மாறாக நாட்டினுள்ள 500 ரூபாவை செல்லாததாக்கினார்.
இதனால் நாட்டில் உள்ள சாதாரண மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். 200க்கு மேற்பட்ட மக்கள் வங்கி வாசலிலேயே மரணமடைந்தனர்.
அப்போது 50 நாட்கள் பொறுங்கள். அதன்பின்பு இந்த பணப் பிரச்சனை இருக்காது என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
அவர் உறுதியளித்தபடி இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. வாக்குறுதியை பிரதமர் மோடி காப்பாற்றுவரா என மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் இந்த வருட முடிவிற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவேன் என சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்திருந்தார்.
அவர் உறுதியளித்தபடி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது.
சம்பந்தர் அய்யா தன் வாக்குறுதியை காப்பாற்றுவரா என தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்தக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் தார்மீகரீதியாக பொறுப்பேற்று பதவி விலகினார்.
அதேபோல் தாங்கள் அளித்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்றால் பிரதமர் மோடியும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர் அய்யாவும் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்வார்களா?
அல்லது இந்த அரசியல் நாகரீகம் எல்லாம் டேவிட் கமரோனுக்கு மட்டும்தான் தங்களுக்கு இல்லை என்று இவர்கள் காட்டப் போகிறார்களா?
இனிமேலாவது அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதி அளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் மோடி மற்றும் சம்பந்தர் அய்யா வாக்குறுதி நிறை வேற்றவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்த வேண்டும்.
மோடி மற்றும் சம்பந்தர் அய்யாவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதன் மூலமே எதிர்காலத்தில் மற்ற அரசியல்வாதிகளுக்கு படிப்பினையாக இருக்கும்.

No comments:

Post a Comment