Saturday, December 31, 2016

•காளை அடக்குவது காட்டுமிராண்டித்தனம் எனக்கூறிய நீதிபதி நிர்வாணமாக திரிவது காட்டுமிராண்டித்தனம் என இவர்களிடம் கூறுவாரா?

•காளை அடக்குவது காட்டுமிராண்டித்தனம் எனக்கூறிய நீதிபதி
நிர்வாணமாக திரிவது காட்டுமிராண்டித்தனம் என இவர்களிடம் கூறுவாரா?
காளை மாட்டை அடக்குவது காட்டுமிராண்டித்தனம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தள்ளனர்.
அதுமட்டுமல்ல மாட்டுக்கு பதில் சிங்கத்தை தந்தால் அடக்குவீர்களா என கிண்டல் வேறு செய்கிறார்கள்.
தமிழன் என்றால், தமிழன் கலை கலாச்சாரம் என்றால் இந்தியாவில் உச்ச நீதின்ற நீதிபதிகளுக்கும்கூட கிண்டல் வருகிறது.
வட இந்தியாவில் சாமியார்கள் என்ற பெயரில் வீதிகளில் நிர்வாணமாக திரிகிறார்கள். இந்த சாமிமார்களை பார்த்து இது காட்டு மிராண்டித்தனம் என்று இந்த நீதிபதிகளால் கூறமுடியுமா?
அல்லது அந்த சாமிமார்களைப் பார்த்து ஆடை தருகிறோம், அணிகிறீர்களா? என்றாவது இந்த நீதிபதிகளால் கேட்க முடிகிறதா?
தமிழன் என்றால் இந்திய அரசுக்கு மட்டுமல்ல இந்திய நீதிமன்றத்திற்கும்கூட கிண்டல் வருகிறது.
தமிழகத்திற்கு காவிரி தண்ணிர் தர முடியாது என்று கர்நாடகம் கூறுகிறது. அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக்கூட மதிக்காமல் இருக்கிறார்கள்.
அவர்களை கண்டிக்கவோ அல்லது கிண்டல் செய்யவோ வக்கற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழன் உணர்வை மட்டும் கிண்டல் செய்கிறார்கள்.
தமிழன் அடிமையாக வீழ்ந்து கிடப்பதால்தானே போறவன் வாறவன் எல்லாம் கிண்டல் செய்யும் இனமாக இருக்கிறாhன்.

No comments:

Post a Comment