Monday, December 12, 2016

•தீர்வு கிடைக்க இன்னும் 30 நாட்களே இருக்கின்றன!

•தீர்வு கிடைக்க இன்னும் 30 நாட்களே இருக்கின்றன!
தமிழ் மக்களுக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வு பெற்று தருவேன் என்று சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்திருந்தார்.
அதன்படி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 30 நாட்களே உள்ளன என்பதை நினைவூட்டுகிறோம்.
அமெரிக்காவில் இலங்கை தூதரகத்திற்கு என வீடு கொள்வனவு செய்யப்பட்டு அதனை கோத்தபாய ராஜபக்சவின் மகன் பயன்படுத்தியுள்ளார்.
21 மாதங்களாக அந்த வீட்டிற்கு வாடகையாக 27.69 மில்லியன் ரூபா இலங்கை மக்களின் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல தூதரகத்திலோ அல்லது இலங்கை அரசிலோ எந்த பதவியும் வகிக்காத கோத்தபாய ராஜபக்சவின் அந்த மகனுக்கு இரண்டு இலங்கைப் படையினரின் பாதுகாப்பும் அமெரிக்காவில் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த விபரங்களை வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீரவே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இங்கு எமது கேள்வி என்னவெனில் நிதி மோசடிக் குற்றத்திற்காக கருணாவைக் கைது செய்த இலங்கை அரசு கோத்தபாயாவையோ அல்லது அவரது மகனையோ கைது செய்யுமா?
அதேவேளை புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் எட்டு வருடங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த 70 வயதான குணரத்ன கஜவீர என்பவர் மருத்துவ சிகிச்சையின்றி சிறையில் உயிரிழந்துள்ளார்.
குணரத்pனவின் 63 வயதான மனைவி சரோஜாதேவியும் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவர்களின் 44 வயதான பந்துல கஜவீரா என்ற மகனும், 45 வயதான மருமகன் அஜித் நிசாந்த என்பவரும்கூட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இங்கு சம்பந்தர் அய்யாவிடம் நாம் கேட்க விரும்புவது என்னவெனில் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யும்படி கேட்காவிட்டாலும் பரவாயில்லை இந்த குடும்பத்தவர்களை விடுதலை செய்யும்படியாவது கோர வேண்டும் என்பதே!
சிறையில் உள்ளவர்களின் விடுதலையை கோருவீர்களா சம்பந்தர் அய்யா அவர்களே!

No comments:

Post a Comment