Saturday, December 31, 2016

•கண் கெட்டபின்பு சூரிய உதயம் பார்க்க நினைக்கும் சுமந்திரன் எம்.பி யின் முட்டாள்தனம்!

•கண் கெட்டபின்பு சூரிய உதயம் பார்க்க நினைக்கும்
சுமந்திரன் எம்.பி யின் முட்டாள்தனம்!
ரவிராஜ் கொலைகாரர்கள் குற்றமற்வர்கள் என நீதி வழங்கப்பட்டுள்ளது.
இனி அடுத்து இதேபோன்று ஜோசப்பரராஜசிங்கம் கொலையிலும் தீர்ப்பு வழங்கப்படும்.
அதையடுத்து போர்க்குற்ற விசாரணை நடந்தாலும் அதிலும்கூட அனைவரும் குற்றமற்வர்கள் என்றே தீர்ப்பு வழங்கப்படும்.
சுமந்திரன் ஒருவரைத் தவிர வேறு எந்த தமிழருக்கும் இந்த தீர்ப்பு குறித்து ஆச்சரியம் இல்லை.
ஏனெனில் குற்றவாளியே நீதிபதியாக இருக்கிற நீதிமன்றத்தில் உரிய நீதி வழங்கப்படும் என சுமந்திரனை தவிர வேறு எந்த முட்டாள் நம்புவான்?
முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல. வெறும் போர்க்குற்றமே என்று சுமந்திரன் கூறினார்.
அடுத்து சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்று அவர் கூறி திரிந்தார்.
ஜ.நா வாசலில் புலம்பெயர் தமிழர்கள் கொட்டும் மழையிலும் குளிரிலும் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருக்க உள்ளே தமிழ் மக்களின் பிரதிநிதியாக கலந்துகொண்ட சுமந்திரன் சூடான கோப்பியை அருந்திக் கொண்டு உள்ளக விசாரணை போதும் என்றார்.
அதுமட்டுமன்றி இது குறித்து கேள்வி கேட்டபோது நான் சட்டம் படித்தவன். எம்மை இலங்கை அரசு ஏமாற்ற முடியாது என்று தம்பட்டம் அடித்தார்.
இப்போது ரவிராஜ் கொலை தீர்ப்பு வெளிவந்ததும் இலங்கை நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பமுடியவில்லை என்று பல்டி அடிக்கிறார்.
போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் வேண்டும் என்பதை ரவிராஜ் கொலைக்கான தீர்ப்பு நியாயப்படுத்துவதாக கூறுகிறார்.
இதைத்தானே தமிழ் மக்கள் ஆரம்பம் முதல் படித்து படித்து சொன்னார்கள். அப்போது யாருடைய சொல்லையும் கேட்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டுவிட்டு இப்ப வந்து நம்பமுடியாது என்றால் என்ன அர்த்தம்?
உள்ளக விசாரணை நடக்கப்போவதில்லை. அப்படி நடந்தாலும் எந்த குற்றவாளியும் தண்டிக்கப்படப் போவதில்லை.
உள்ளக விசாரணை நடந்தால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பே வழங்கப்படும் என்பது உறுதியாக தெரிகிறது.
ஆனால் இத்தனை நாளும் உள்ளக விசாரணையில் நீதி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டிருந்த சுமந்திரனுக்கு இப்பதான் சந்தேகம் வர ஆரம்பித்துள்ளது.
சுமந்திரன் தனது தவறுகளை இப்போது உணர்ந்து கொண்டாலும் இனி அதனால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை.
ஏனெனில் சுமந்திரன் தமிழ் மக்களுக்கு மாபெரும் கேட்டை விளைவித்த ஒரு நபராகவே வரலாறு பதிவு செய்யப் போகிறது.

No comments:

Post a Comment