Saturday, October 26, 2019

இலங்கையில் இந்திய அரசு கொண்டாடிய காந்தி ஜெயந்தி விழா!

•இலங்கையில்
இந்திய அரசு கொண்டாடிய காந்தி ஜெயந்தி விழா!
வழக்கத்தைவிட இம்முறை பெரிய அளவில் காந்தி ஜெயந்தி விழா இந்திய அரசால் இலங்கையில் கொண்டாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. பிரதமரின் அலரிமாளிகையில் கொண்டாடப்பட்டுள்ளது. அதைவிட யாழ்ப்பாணத்திலும் கொண்டாடப்பட்டுள்ளது.
அதுவும் யாழ் மாவட்டத்தில் 6 காந்தி சிலைகள் இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய தூதர் பெருமையுடன் கூறுகிறார்.
இந்தியாவில் காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு விழா நடத்தும் மோடி அரசு இலங்கையில் தன் ஆக்கிரமிப்பிற்காக காந்திக்கு விழா நடத்துகிறது.
காந்தி ஏன் ஆங்கிலேயரை எதிர்த்தார்?
ஆங்கிலேயர் இந்தியாவை ஆக்கிரமித்து இந்தியாவின் வளங்களை சுரண்டியதால்தானே காந்தி ஆங்கிலேயரை எதிர்த்தார். அதற்காகத்தானே இந்தியாவுக்கு சுதந்திரம் கோரினார்.
அப்படியென்றால் காந்தியின் கருத்துப்படி தமது வளங்களை ஆக்கிரமித்து சுரண்டும் இந்தியாவை ஈழத் தமிழர்கள் எதிர்ப்பதில் என்ன தவறு?
காந்தியின் பெயரால் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை நடத்த முயலும் இந்திய அரசின் முயற்சிகளை முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத் தமிழர்களினதும் கடமையாகும்.

No comments:

Post a Comment