•பஞ்சாப் பல்வந் சிங் ற்கு ஒரு நியாயம்
தமிழக பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான் இந்திய அரசின் நியாயமா?
தமிழக பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான் இந்திய அரசின் நியாயமா?
பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த் சிங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பல்வந்த் சிங்.
இவர் மீது தடா சட்டம் போடப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது பல்வந் சிங் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் அதற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூறினார்.
அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பல்வந்த் சிங் கருணை மனு போடவில்லை. இருந்தும் அன்றைய முதலமைச்சர் பாதல் மனுவிற்கு அமைய அவரது தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.
கொல்லப்பட்ட முதலமைச்சர் பியாந்த் சிங் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இப்போது முதலமைச்சராக இருப்பவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
இருப்பினும் இப்போதைய முதலமைச்சர் குருநானக்கின் 550வது பிறந்தநாளை ஒட்டி 550 கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதில் பல்வந்த் சிங் ஒருவர். இவரை விடுதலை செய்ய முதலமைச்சர் அனுப்பிய அறிக்கைக்கு ஒரு வாரத்தில் சம்மதம் தெரிவித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
ஆனால் பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை என்று விசாரணை செய்த அதிகாரி கூறினார். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என நீதிபதி கூறினார்.
தமிழ்நாடு அரசு விடுதலை செயய்லாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த பின்பு தமிழக முதலமைச்சர் ஜெயா அம்மையார் 2014ல் பேரறிவாளன் உட்பட எழுவரை விடுதலை செய்வதாக தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆனால் மத்திய அரசு உடனே உச்சநீதிமன்றம் சென்று தடுத்தது. அதன் பின்னரும் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என உச்சநீதிழமன்றம் மீண்டும் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து மீண்டும் தமிழக அரசு பேரறிவாளன் உட்பட எழுவரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பியது.
ஆனால் அது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசும் ஆளுநரும் வேண்டும் என்றே பல மாதங்களாக தாமதம் செய்கிறார்கள்.
பலவந்த் சிங்கிற்கு ஒரு வாரத்தில் சம்மதம் தெரிவித்த மத்திய அரசு பேரறிவாளனுக்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கிறது.
இதேபோன்று நடிகர் சஞ்சய் தத்ற்கு மராட்டிய மாநில அரசு தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்தபோதும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம் அளித்தது.
இந்தியா ஜனநாக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள்.
ஆனால் சஞ்சசத் தத் பல்வந்த் சிங போன்றவர்களுக்கு ஒரு நியாயம் பேரறிவாளனுக்கு இன்னொரும் நியாயமம் இந்திய அரசு வழங்குகிறது.
இது என்ன நியாயம்?
No comments:
Post a Comment