Saturday, October 26, 2019

இவர் இயக்குனர் இமயம்

இவர் இயக்குனர் இமயம்
இவர் சிங்கள அரசின ஆளுநரை சந்திப்பதும்
சிங்கள ஆளுநரிடமிருந்து புத்தர் சிலை பெறுவதும்
மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு என்பார்கள்.
சரி அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்
இதன் அருகில்தானே காணாமல் போனவர்களின் உறவுகள்
இரண்டு வருடமாக போராட்டம் நடத்துகிறார்கள்
கொட்டும் மழையிலும் கொடும் வெயிலிலும் வாடும் அவர்களை
மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும் என்று
ஏன் இந்த இயக்குனர் இமயத்திற்கு தோன்றவில்லை?
அவர்களை சந்தித்து ஒரு ஆறுதல் வார்த்தை கூறியிருந்தால்
அவர்கள் மனங்களில் இமயமாக தோன்றியிருப்பாரே?

No comments:

Post a Comment