Saturday, October 26, 2019

இந்திய அரசே! சீமான் மீது வழக்கு போட்டு அடக்க நினைக்கலாம் -

•இந்திய அரசே!
சீமான் மீது வழக்கு போட்டு அடக்க நினைக்கலாம் -ஆனால்
சீமான் எழுப்பிய கேள்வியை வழக்கு போட்டு தடுக்க முடியாது
32 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதத்தில்தான் அமைதிப்படை என்று வந்த இந்திய ராணுவம் ஈழத் தமிழர்கள் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
சுமார் இரண்டு வருடங்களாக இந்திய ராணுவத்தால் 8000 ற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். 700க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான தமிழர் சொத்துகள் சேதமாக்கப்பட்டன.
இன்றுவரை இதற்கு நீதி வழங்கப்படவில்லை. சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி கூட தமிழ் மக்களிடம் இதுவரை மன்னிப்பு கோரவில்லை.
ஆனால் ராஜீவ் காந்தி கொலை பற்றி பேசும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு காரணமான இந்த இந்திய ராணுவக் கொலைகள் பற்றி பேச மறுக்கின்றனர்.
அதுமட்டுல்ல இந்த நியாயத்தைக் கேட்ட சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கோருகின்றனர்.
வழக்கு பதிவு செய்வது சீமான் கேட்ட நியாயத்திற்கான உரிய பதில் இல்லை. இது கோடிக்கணக்கான தமிழர் மனங்களில் இருக்கும் கேள்வியாகும்.
ஆனால் இதே காங்கிரஸ் கட்சி பஞ்சாப்பில் தனது முதலமைச்சரையே கொலை செய்தவரை விடுதலை செய்ய பரிந்துரைத்துள்ளது. அதை மோடி அரசும் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளது.
முதலமைச்சர் பியாந்த் சிங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பல்வந்த் சிங். விசாரணையின் போது பல்வந் சிங் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் அதற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூறினார்.
அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பல்வந்த் சிங் கருணை மனு போடவில்லை. இருந்தும் அன்றைய முதலமைச்சர் பாதல் மனுவிற்கு அமைய அவரது தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.
கொல்லப்பட்ட முதலமைச்சர் பியாந்த் சிங் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இப்போது முதலமைச்சராக இருப்பவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
இருப்பினும் இப்போதைய முதலமைச்சர் தன் கட்சி முதலமைச்சரை கொன்றதை பெருமையாக நினைக்கும் ஒருவரை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இவ்வாறு தமிழ்நாட்டில் ஒரு முகமும் பஞ்சாபில் இன்னொரு முகமுமாக காங்கிரஸ் காட்டுவதற்கு என்ன காரணம்?
பஞ்சாபில் காங்கிரஸில் இருந்தாலும் சீக்கியன் தன்னை சீக்கியனாக உணர்கிறான். ஆனால் தமிழ் நாட்டில் யாராவது ஒரு தமிழன் தன்னை தமிழனாக உணர முனைந்தால் உடனே அவன்மீது “தேசவிரோதி” வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலை மாறாதவரை தமிழனுக்கு விமோசனம் இல்லை.

No comments:

Post a Comment