Saturday, October 26, 2019

•அசுரன் சினிமா – சில கருத்துகள்

•அசுரன் சினிமா – சில கருத்துகள்
கலகம் செய்ய துணிந்துவிட்டவனுக்கு உதவி புரிவதே ஒரு இலக்கியத்தின் பணியாக இருக்க வேண்டும் என மார்க்சிம் கார்க்கி கூறினார்.
அவர் எழதிய “தாய்” நாவல் ரஸ்சிய புரட்சிக்கு மட்டுமல்ல உலகில் ஏற்பட்ட பல போராட்டங்களுக்கு உதவி புரிந்தது. இன்றும்கூட உதவி வருகிறது.
ஆனால் “அசுரன்” இன்னொரு போராட்டம் முன்னெடுப்பதற்கு உதவி புரியவில்லை. சாதி தீண்டாமை ஒழிப்பிற்கு சரியான வழியும் காட்டவில்லை.
“அசுரன்” நடந்த சாதிக் கொடுமைகளை பேசிய அளவிற்கு சாதி ஒழிப்பு பற்றி பேசவில்லை.
தவறுகளை திரும்பிப் பார்ப்பது என்பது முன்னோக்கி நடப்பதற்கு உதவுவதாகவே இருக்க வேண்டும்.
அதேபோன்று நடந்த சாதி கொடுமைகள் பற்றி பேசுவதென்பது சாதியை இனிவரும் காலத்தில் சாதியை ஒழிப்பது எப்படி என்பதை சிந்திக்க தூண்ட வேண்டும்.
ஒவ்வொரு சொல்லுக்கு பின்னரும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒழிந்திருக்கிறது என்று லெனின் கூறினார்.
அசுரன் சினிமாவின் பின்னரும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒழிந்திருக்கிறது.
அது “அடிப்பது வன்முறை என்றும் திருப்பி அடிப்பதும் வன்முறை” என்றும் கூற முயல்கிறது. ஆனால் “அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. மாறாக அது தற்காப்பு” என்ற உண்மையை அது மறைக்கிறது.
அதுமட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்கள் இதுவரை பெற்ற தீர்வு எல்லாம் தானாக கிடைத்ததில்லை, போராடி பெற்ற தீர்வு என்பதையோ அல்லது வன்முறை மூலம் பெற்ற தீர்வு என்ற உண்மையையோ அது மறைக்கிறது.
மாறாக, வன்முறையை கையில் ஏந்தாமல் படிப்பதன் மூலம் தீர்வு பெற முடியும் என்று தாழ்த்தப்பட்ட சாதி மக்களை ஏமாற்ற முயல்கிறது.
ஆளும் வர்க்க நலனுக்கு துணை செய்யும் இவ் நஞ்சுக் கருத்துகளை அசுரன் சினிமா மூலம் ஜனரஞ்சகமாக தருவதில் வெற்றிமாறன் வெற்றி பெற்றுள்ளார்.
துரதிருஸ்டம் என்னவெனில் இவ் நயவஞ்சகத்தை அம்பலப்படுத்த வேண்டியவர்களே இதை சிறப்பான படம் என்று பரிசு வழங்கி பாராட்டுகின்றனர்.
1980களில் வந்த படம் பாலசந்தரின் “தண்ணீர் தண்ணீர்”. இதில் தனி மனிதனாக போராடி வெல்ல முடியாது என்பதை உணர்ந்த கதாநாயகன் இறுதியில் வன்முறை அமைப்பான நக்சலைட்டில் இணைவதாக அவர் காட்டியிருக்கிறார்.
ஆனால் 1980களில் பாலச்சந்தருக்கு இருந்த தைரியம்கூட 2019ல் வெற்றிமாறனுக்கு வரவில்லை. ஏனெனில் வெற்றிமாறன் சினிமா என்பது மறைமுகமாக ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு உதவுதாக உள்ளது.
வெற்றிமாறன் அவர்களே!
போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை. எனவேதான் போராட்டம் இன்பமயமானது என்கிறார்கள்.

No comments:

Post a Comment