Saturday, October 26, 2019

•இந் நிலை என்று மாறும்? தமிழன் தலை எப்ப நிமிரும்?

•இந் நிலை என்று மாறும்?
தமிழன் தலை எப்ப நிமிரும்?
ஆங்கிலேயர்களை முதன் முதலில் 1857ல் எதிர்த்து போரிட்டவன் மங்கள் பாண்டே ன்னு வட இந்தியன் படமெடுக்கிறான்.
ஆங்கிலேயர்களை முதன் முதலில் 1846ல் எதிர்த்து போரிட்டவன் நரசிம்ம ரெட்டி என்று தெலுங்கன் படமெடுக்கிறான்.
ஆனால் 1750களிலேயே 13 முறை ஆங்கிலேயரை ஓட ஓட விரட்டியவன் புலித்தேவன் பற்றி படமெடுக்க ஒரு தமிழனும் இல்லை.
படம் எடுப்பது இருக்கட்டும். தமிழ் மன்னன்தான் முதன் மதலில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டான் என்பதை சொல்லக்கூட முடியவில்லை.
சரி. பரவாயில்லை. ஆனால் இப்போது வெளி வந்திருக்கும் கீழடி நாகரீகத்தைக்கூட தமிழ் நாகரீகம் என்று சொல்லக்கூடாதாம்.
இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்ட முடியும் என்று அம்பேத்கர் கூறுகிறார்.
இங்கு அம்பேத்கர் இந்தியாவின் பூர்வகுடி தமிழர்கள் என்றே கூறியிருக்கிறார். அவர் திராவிடர் என்று கூறவில்லை.
ஆனால் அம்பேத்கர் பாதையை பின்பற்றுவதாக கூறும் சிலர் கீழடி நாகரிகத்தை தமிழர் நாகரீகம் என்று கூறக்கூடாதாம். திராவிடர் நாகரீகம் என்று கூறவேண்டுமாம்.
ஏன் இந்த நிலை தமிழனுக்கு?

No comments:

Post a Comment