Saturday, October 26, 2019

பெரியாரியம், அம்பேத்காரியம் போன்றவற்றை ஏன் ஈழத் தமிழர்கள் மத்தியில் இறக்குமதி செய்ய முற்படுகின்றனர்?

பெரியாரியம், அம்பேத்காரியம் போன்றவற்றை
ஏன் ஈழத் தமிழர்கள் மத்தியில் இறக்குமதி செய்ய முற்படுகின்றனர்?
பெரியார் முன்வைத்த கருத்துகள் பெரியாரியம் என்றும் அம்பேத்கார் முன்வைத்த கருத்துகள் அம்பேத்காரியம் என்றும் அழைக்கப்படுகின்றன.
இக் கருத்துகள் மார்க்சியம் போன்று புரட்சிகரமான கருத்துகள் இல்லை. இவை வெறும் சீர்திருத்தக் கருத்துகளே.
அம்பேத்கார் பெரியார் ஆகியோர் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களுடைய கருத்துகள் ஈழத் தமிழர் மத்தியில் இறக்குமதி செய்யப்படவில்லை.
ஆனால் இப்போது சிலர் இக் கருத்துகளை ஈழத் தமிழர்கள் மத்தியில் இறக்குமதி செய்ய முயற்சி செய்கின்றனர்.
பெரியாரும் அம்பேத்காரும் போராடிய இந்திய மண்ணில்தான் கடந்த வருடம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு மலம் கரைத்து வாயில் ஊற்றிய தீண்டாமைக்கொடுமை நடந்தது.
ஆனால் ஈழத் தமிழர்கள் மத்தியில் அண்மைக்காலங்களில்; இவ்வாறான கொடுமை நிகழவில்லை. இதற்கு காரணம் ஈழத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவர்கள் கம்யுனிஸ்டுகளே.
எனவேதான் இந்தியா போன்று ஈழத்தில் பெரியாரியம் மற்றும் அம்பேத்காரியம் போன்ற சீர்திருத்தக் கருத்துகள் தோற்றம் பெற வாய்ப்பு இருக்கவில்லை.
சரி, இப்போது எதற்காக இக் கருத்துகளை ஈழத் தமிழர்கள் மத்தியில் இறக்குமதி செய்ய முற்படுகின்றனர் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
இதற்கு பதில் தெரிவதற்கு முன்னர் நாம் ஒரு விடயத்தை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த வரும் யாழ் இந்திய தூதர் அம்பேத்கார் சிலையை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்தார்.
இதைப் படித்ததும் இந்திய தூதர் எதற்கு அம்பேத்கார்ரை ஈழத் தமிழர் மத்தியில் இறக்குமதி செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.
அதற்கு பதில் தெரிவதற்கு இன்னொரு விடயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
2009 வரை இந்திய ஆக்கிரமிப்பு இலங்கையில் வடக்கு கிழக்கில் நிகழ்வதற்கு புலிகள் இயக்கம் அனுமதிக்கவில்லை.
அதனால் இலங்கை அரசுக்கு உதவி செய்து புலிகளை அழித்த இந்தியா அதன் பின்னர் வடக்கு கிழக்கு முழுவதும் ஆக்கிரமித்து சுரண்டி வருகிறது.
அவ்வாறு இந்தியா ஆக்கிரமித்த பகுதிகளில் ஒன்றே கிழக்கு மாகாணத்தில் உள்ள சம்பூர் ஆகும்.
இங்கு 650 ஏக்கர் சம்பூர் மக்களின் நிலம் மகிந்த ராஜபக்சவினால் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் சம்பூர் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி தமது நிலத்தை மீண்டும் பெற்றுக் கொண்டார்கள்.
இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி. எப்படி சம்பூர் மக்கள் இதனை சாதித்தார்கள் என்று குழம்பிப் போனது.
சம்பூரில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல சிங்கள மற்றும் வேடுவ இன மக்களும் ஒன்றுபட்டு போராடியதை இந்தியா கண்டறிந்தது.
இலங்கை வரலாற்றில் நான்கு இன மக்களும் ஒன்றுபட்டு போராடியது இந்த சம்பூரில் மட்டுமே என்பதையும், அதனால்தான் அந்த மக்கள் வெற்றியை பெற்றார்கள் என்பதையும் இந்தியா உணர்ந்து கொண்டது.
எனவே இனி இதுபோன்று நடக்காமல் இருப்பதற்காகவும் தான் தொடர்ந்தும் ஆக்கிரமித்து சுரண்டுவதற்கு ஒரே வழி மக்களை ஒன்றுபட விடாமல் பிரிக்க வேண்டும் என்று இந்தியா திட்டம் தீட்டியது.
அதன் ஒருபடியாகவே ஒருபுறம் சிவசேனையை ஈழத்திற்கு அனுப்பிவைத்த இந்தியா மறுபுறத்தில் தமது தூதுவர் மூலம் அம்பேத்கார் சிலையையும் திறந்து வைக்கிறது.
மக்களை ஒன்றுபடாமல் தடுப்பதற்காக இனரீதியாக மட்டுமல்ல மத ரீதியாக சாதிரீயாக மற்றும் பிரதேரீதியாகவும் பிரித்து வைக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
இங்கு இன்னொரு முக்கிய விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2009 ற்கு பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்தேசிய உணர்வு மேலோங்கி வருகின்றது. தமிழக தமிழர்கள் மட்டுமன்றி உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபடுவதற்கான உணர்வுகள் மேலோங்கி வருகின்றன.
இந்த உருவாகிவரும் தமிழ் தேசிய உணர்வை இந்திய அரசு தனக்கு ஆபத்தானதாக கருதுகிறது. இதனால் அதை தடுப்பதற்காக தமிழ் மக்கள் மத்தியில் தன்னால் இயன்ற அனைத்து குழப்பல் வேலைகளையும் முன்னெடுக்க முனைகிறது.
இதனை ஈழத் தமிழர்கள் உணர்ந்து முறியடிப்பார்கள்.
குறிப்பு- பெரியாரிய மற்றும் அம்பேத்காரிய கருத்துகளை முன்னெடுப்பவர்கள் அனைவரும் இந்திய அரசுக்கு துணை போவதாக குற்றம் சாட்ட முடியாது அல்லவா என சிலர் கேட்கலாம். உண்மைதான். சிலர் இக் கருத்துகளை முன்னெடுப்பதற்கு காரணம் அதனால் அவர்களுக்கு பதவி மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. முக்கியமாக அர்ப்பணிப்பான போராட்டம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அதனால்தான் “அடிக்கு அடி” என்னும் மார்க்கிய கருத்தை சாதீய கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் பின்பற்றுவதில்லை.

No comments:

Post a Comment