Thursday, October 31, 2019

•கோழியின் மூன்றாவது கால் எங்கே?

•கோழியின் மூன்றாவது கால் எங்கே?
சுமந்திரனின் பிரான்ஸ் விசிட் !
கோழிக்கு இரண்டு கால் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதையே சுமந்திரன் கூறினால் நாம் மூன்றாவது காலை தேட வேண்டும்.
ஏனெனில் சுமந்திரன் எப்போதும் தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகவே கருத்துகள் கூறி வருகிறார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களின் கருத்தை கேட்பதற்காக சுமந்திரன் பிரான்ஸ் வந்ததாக கூறுகிறார்கள்.
புலம்பெயர் தமிழ் மக்களின் வோட்டில் நான் எம்.பி யாகவில்லை. புலம்பெயர் தமிழ்மக்களின் கருத்தை நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று இதுவரை இறுமாப்புடன் கூறிவந்த சுமந்திரன் இப்போது எதற்காக அவர்களின் கருத்தை கேட்க வந்திருக்கிறார்?
ஏனெனில் சுமந்திரனும் சம்பந்தரும் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்துவிட்டார்கள். அதை தமிழ் மக்களின் முடிவு என்று காட்டுவதற்காக ஆடும் நாடகமே இது.
அவர் தாராளமாக சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கட்டும். ஆனால் இம்முறை அவர் மக்களுக்கு இரண்டு உண்மைகளை கூறவேண்டும்.
முதலாவது, ஆதரவுக்கு ஏதாவது உடன்பாடுகள் காணப்பட்டிருந்தால் அவை என்ன என்பதை தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக கூறவேண்டும்.
இரண்டாவது, ஆதரவிற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டது? யாருக்கு அவை பங்கிடப்பட்டது? போன்ற கணக்கை மக்களுக்கு வெளிப்படையாக காட்ட வேண்டும்.
குறிப்பு - ஒருமுறை சுமந்திரன் ஏமாற்றினால் அது சுமந்திரன் தவறாகும். தொடர்ந்து சுமந்திரன் ஏமாற்றினால் அது ஏமாறும் மக்களின் தவறாகும். இம்முறை மக்கள் தங்கள் தவறை திருத்திக் கொள்வார்களா? அல்லது தொடர்ந்தும் சுமந்திரனிடம் ஏமாறப் போகிறார்களா?

No comments:

Post a Comment