Saturday, October 26, 2019

•சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!

•சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!
இன்று (11.10.2019) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஆகும்.
உலக ஜனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியென்றால் ஜனநாயக முறைப்படி பெண்களிடம்தானே அதிகாரம் இருக்க வேண்டும்? ஆனால் ஏன் இல்லை?
சரி. அதிகாரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆணுக்கு பெண் சமமாகத்தானே நடத்தப்பட வேண்டும். ஆனால் பெண் ஏன் அடிமையாக்கப்பட்டாள்?
எல்லா மிருகங்களிலும் பெண்தானே தலைவியாக இருக்கின்றாள். மனித இனத்திலும் பெண் தலைமைத்துவ குடும்பமே இருந்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது.
அப்படியென்றால் இப்போது ஏன் பெண் அடிமையாக நடத்தப்படுகிறாள்?
இன்று ஒருபுறம் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் மலையகத்தில் 11 தமிழ் சிறுமிகளை தலைமை ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோகம் செய்து கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றது.
பெண் குழந்தைகள் பாடசாலைக்குகூட பாதுகாப்பாக செல்ல முடியவில்லை என்றால் அவர்கள் எப்போது எப்படித்தான் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவது?
ஈழத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலத்தில் தங்களால் படிக்க மட்டுமல்ல ஆயுதம் எந்தி போராடவும் முடியும் என்று நிரூபித்து காட்டியவர்கள் எமது தமிழ் பெண்கள்.
மண் விடுதலை பெற வேண்டும் என்றால் முதலில் பெண் விடுதலை பெற வேண்டும். 3000 ற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் வீர மரணம் அடைந்தும் அவர்களுக்குரிய விடுதலை இன்னும் கிடைக்கவில்லை.
ஆனால் போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை. எனவே தமிழ் பெண்கள் தமது வீரமிக்க போராட்டம் மூலம் தமது விடுதலையை மட்டுமல்ல மண் விடுதலையையும் சேர்த்து பெறுவார்கள். இது உறுதி.

No comments:

Post a Comment