Saturday, October 26, 2019

•இன்று சர்வதேச சிறுவர்கள் தினம்

•இன்று சர்வதேச சிறுவர்கள் தினம்
சரணடைய சொன்னார்கள்
சரணடைந்தேன்
பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள்
உட்கார்ந்தேன்
சாப்பிட பிஸ்கட் தந்தார்கள்
சாப்பிட்டேன்
அப்புறம் பார்த்தா சுட்டுக் கொன்றார்கள்
இறந்துவிட்டேன்.
பரவாயில்லை. ஆனால் ஒரு கேள்வி
என்னை ஏன் சுட்டுக் கொன்றார்கள் ?
ஏனென்றால் என் அப்பா பயங்கரவாதியாம்.
எனவே நானும் பயங்கரவாதி என்கிறார்கள்
சரி. அப்படியென்றால்
ஜேவிபி விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றீர்கள்
ஆனால் அவர் பிள்ளைகளை பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை?
ஏனென்றால் அவர் சிங்களவர்
இப்போது புரிகிறதா ?
நடந்தது போர்க்குற்றம் இல்லை இனப்படுகொலை என்று!
குறிப்பு - இவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்குரிய நீதியை எப்போது, எப்படி பெற்றுக் கொடுக்கப் போகிறோம்?

No comments:

Post a Comment