Saturday, October 26, 2019

இவர்கள் இருவரும் தமிழர்கள்

இவர்கள் இருவரும் தமிழர்கள்
இவர்கள் இருவரும் சிவகங்கையை சேர்ந்தவர்கள்
இவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒருவர் எல்லோரும் அறிந்த முன்னாள் அமைச்சர் சிதம்பரம். ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்ல இவர் லஞ்சமாக பணத்துடன் தன்னுடன் படுக்கையையும் பகிர்ந்துள்ளார் என்று ஒரு பெண்ணே குற்றம்சாட்டியுள்ளார்.
மற்றவர் நீண்டகால தமிழ்தேசிய போராளி தோழர் திருச்செல்வம். இந்த ஊழல்பேர்வழி சிதம்பரத்தை தாக்க முனைந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருப்பவர்.
சிதம்பரத்திற்கு சிறையில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைவிட மதிய சாப்பாடு வீட்டில் இருந்து கொண்டுவந்து கொடுப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் வயசானவர் என்பதால் அவருக்கு உடன் ஜாமீன் வழங்கவேண்டும் என்று ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் கேட்கிறார்கள்.
ஆனால் தோழர் திருச்செல்வம் சிறையில் நடந்த ஊழல்களை தட்டிக் கேட்டமைக்காக கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
தோழர் திருச்செல்வம் தமிழ்தேசிய போராளி என்பதால் வேண்டுமென்றே சித்திரவதை செய்யப்படுகிறார்.
ஆனால் சிதம்பரத்திற்காக குரல் கொடுக்கும் எவரும் தோழர் திருச்செல்வத்திறந்காக இதுவரை குரல் கொடுக்கவில்லை.
இதைவிட வருத்தம் தரும் விடயம் என்னவெனில் தோழர் திருச்செல்வம் ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து வருபவர். ஆனால் சிதம்பரம் பதவியில் இருந்தபோது ஈழத் தமிழர்களை அழிக்க துணை போனவர். இந்த உண்மை தெரியாமல் சில ஈழத் தமிழர்கள் சிதம்பரத்திற்காக குரல் கொடுக்கிறார்கள்.
குறிப்பு – எதிர்வரும் 23.10.19 யன்று தோழர் திருச்செல்வம் மீதான தாக்குதலைக் கண்டித்து சிறைத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment