"எக்காரணம் கொண்டும் எமது அரசியல் இலாபத்திற்காக மதத்தைப் பாவிக்க மாட்டோம்" என்று அனுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
அதுவும் கண்டியில் பௌத்த சம்மேளன மாநாட்டில் புத்த பிக்குகளின் முன்னிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.
அனுரா சிங்களவர்தான். அதுவும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்தான். ஆனாலும் தமது அரசியல் லாபத்திற்காக மதத்தை பாவிக்கமாட்டோம் என தைரியமாக கூறியுள்ளார்.
அதேவேளை "எமது நாட்டை பௌத்த கேந்திர மத்திய நிலையமாக மாற்றுவேன்" என்று சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
எனவே தமிழர் நலனில் அக்கறை உள்ள எவரும் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க மாட்டார்கள். மாறாக அனுராவையே ஆதரிக்க முடியும்.
ஆனால் சம்பந்தர் ஐயா அனுராவுடன் பேசமாட்டேன. சஜித் பிரேமதாசாவுடன்தான் பேசுவேன் என்கிறார்.
இதற்கு வர்க்க பாசத்தை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
No comments:
Post a Comment