Tuesday, May 30, 2017

2009 இனப்படுகொலையை தமிழினம் மறந்துவிட முடியுமா?

•2009 இனப்படுகொலையை தமிழினம் மறந்துவிட முடியுமா?
2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக் கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தமிழ் இனம் மறந்துவிட வேண்டும் என இலங்கை இந்திய அரசுகள் விரும்புகின்றன.
“வடக்கின் வசந்தம்” மூலம் கார்பெட் றோட் போட்டுக்கொடுத்தால் இனப்படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என மகிந்த ராஜபச்ச நினைத்தார்.
50 ஆயிரம் வீடு கட்டித் தருவதாக கூறினால் இனப் படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என இந்திய அரசு நினைத்தது.
சுமந்திரனை விலைக்கு வாங்குவதன் மூலம் இனப் படுகொலையை வெறும் போர்க்குற்றமாக தமிழ் மக்கள் மனங்களில் மாற்றிவிட முடியும் என இன்றைய நல்லாட்சி அரசு நினைத்தது.
ஆனால் ஆண்டு செல்ல செல்ல மக்கள் மறப்பதற்கு பதிலா இன்னும் அதிகம் அதிகமாக நினைவில் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மட்டுமே முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூர்ந்தனர்.
ஆனால் இன்று தமிழக தமிழர்கள், மலேசிய சிங்கப்பூர் தமிழர்கள் எல்லோரும் இதனை நினைவில் கொள்கின்றனர்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந் நாட்களில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மற்ற இன மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள்.
புலம்பெயர் நாட்டில் பிறந்து வளரும் அடுத்த சந்ததி தமிழ் மொழியை பேசாவிட்டாலும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான நீதியைக் கோராமல் இருக்காது.
ஜ.நா வில் ஈழத் தமிழருக்கான நீதி கிடைக்காமல் போகலாம். ஆனால் உலக மக்கள் இந்த அடுத்த சந்ததியினரின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவு கல் அமைக்க முயன்ற கிருத்தவ பாதிரியார் எழில் என்பவரை இலங்கை புலனாய்வாளர்கள் கைது செய்து மிரட்டியுள்ளார்கள்.
தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றது மட்டுமன்றி அவர்களை தமிழ் மக்கள் நினைவு கூருவதையும் அச்சுறுத்தி அடக்க முனைகிறது இலங்கை அரசு.
அடக்குமறை இருந்தால் அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இருக்கும் அல்லவா. ஆம், இலங்கையில் அடக்கலாம். இங்கிலாந்தில் அடக்க முடியுமா?
இங்கிலாந்தில் மாண்டவர்களுக்கு நினைவு தூபி கட்டப்படுகிறது. அதுமட்டுமன்றி மற்ற இன மக்களுக்கு முள்ளிவாய்க்கால் அவலத்தை விளக்குவதற்காக ஸ்கொட்லாந்தில் இருந்து ஊர்தி மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
தமிழ் மக்கள் மீண்டும் எழுந்து நிற்பார்கள். கடந்த முறையைவிட பலமாக. இது உறுதி.

No comments:

Post a Comment