Tuesday, May 30, 2017

•எது விதைக்கப்பட்டதோ அதையே அறுவடை செய்ய முடியும்.

•எது விதைக்கப்பட்டதோ அதையே அறுவடை செய்ய முடியும்.
செய்தி- அஞ்சலி செலுத்த வந்த சம்பந்தர் அய்யாவை வெளியேறு என மக்கள் அவமதித்தது அநாகரீகம் என சுமந்திரன் தெரிவிப்பு
சுமந்திரன் அவர்களே!
அஞ்சலி செலுத்த வந்த சம்பந்தர் அய்யாவை அவமதித்தது அநாகரீகம்தான். ஆனால் இந்த நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம்?
வாக்கு போட்டு பதவியை தந்த அதே மக்கள் இன்று வெளியேறு என குரல் எழுப்ப யார் காரணம்?
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என வாக்குறுதியளித்த சம்பந்தர் அய்யா அதை நிறைவேற்றினாரா?
இரண்டு வாரத்தில் நல்ல செய்தி வரும் என்று கூறிய சம்பந்தர் அய்யா அதை நிறைவேற்றினாரா?
பிக்குமாரைக் கண்டால் எழுந்தோடி வரவேற்பதும் முன்னாள் போராளிகள் கதைக்க போனால் பேப்பர் படித்துக்கொண்டு திறப்பு என்னிடம் இல்லை என்று கிண்டலாக கூறுவதும் என்ன நாகரீகம்?
மக்கள் வீதியில் நின்று போராடுகிறார்கள். ஆனால் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் இந்திய தூதுவருடன் விருந்துண்டு மகிழ்வது என்ன நாகரீகம்?
தமிழ் மகக்ள் தங்கள் உறவுகளை நினைவு கூர்வதற்கு தடை விதிக்கும் அரசில் இருந்துகொண்டு சிங்கக்கொடி ஏந்தி மகிழ்வது என்ன நாகரீகம்?
பாடசாலைகள் கூரை போடப்படவில்லை. மக்கள் ஓட்டை வீடுகளில் வாழுகிறாhகள. ஆனால் சம்பந்தர் தனது கோயிலுக்கு 150 லட்சம் ரூபா அரசிடம் பெற்றது என்ன நாகரீகம்?
கடன் சுமை தாங்க முடியாமல் வறுமையின் கொடுமையால் பெற்றோர் பிள்ளைகளுடன் தற்கொலை செய்கிறார்கள். இந்நிலையில் தனது வீடு திருத்தவும் சொகுசு வாகனம் வாங்கவும் 4 கோடி ரூபா அரசில் பெறுவது என்ன நாகரீகம்?
பலரை சில காலம் ஏமாற்றலாம். சிலரை பலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.
முள்ளிவாய்க்காலில் தமிழ் மககள் சம்பந்தர் அய்யா மீது காட்டிய சீற்றமானது சம்பந்தர் அய்யா இதுவரை விதைத்ததின் அறுவடையே.
சிங்கள பொலிஸ் காவல் இன்றி வந்து பாருங்கள். இன்னும் நிறைய கிடைக்கும்.

No comments:

Post a Comment