Tuesday, May 30, 2017

வரலாம் வா வா !

வரலாம் வா வா !
தீபா அரசியலுக்கு வரலாம்
தீபா கணவர் அரசியலுக்கு வரலாம்
தீபாவின் டிறைவர்கூட வரலாம்
ஆனால் ரஜனி அரசியலுக்கு வரக்கூடாதா?
இது என்ன நியாயம்?
ஆனால்,
“பச்சை தமிழன்” என்று சொன்னால்தான்
தமிழ்நாட்டில் அரசியலுக்கு வரமுடியும் என்ற
நிலையை
தமிழன் உருவாக்கிவிட்டானே.
இதுதான் தமிழன் முதல் வெற்றி
நீர் பச்சை தமிழனா அல்லது பம்மாத்து தமிழனா
என்பது பற்றி எமக்கு அக்கறை இல்லை.
உமது அடுத்த படத்திற்காக அரசியல் பேசுகிறீரா
அல்லது
உண்மையிலே பதவி ஆசையிலதான்; அரசியல் பேசுகிறீரா
என்பதும் குறித்தும் எமக்கு கவலை இல்லை
எமது அக்கறை எல்லாம்
தமிழின விடுதலைக்கு எம்முடன் தோள் கொடுக்கப் போகிறீரா
அல்லது
எமது பெரு நெருப்பில் நீர் பொசுங்கி விடப் போகிறீரா என்பதே!

No comments:

Post a Comment