Tuesday, May 30, 2017

•மறையாது மடியாது நக்சல்பாரி மரணத்தை வென்றிடும் நக்சல்பாரி!

•மறையாது மடியாது நக்சல்பாரி
மரணத்தை வென்றிடும் நக்சல்பாரி!
அப்பாவி ஆதிவாசிகளை கைது செய்து அவர்கள் மீது நக்சல்பாரிகள் என முத்திரை குத்தி சித்திரவதை செய்கிறது இந்திய அரசு.
சதீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் சப் ஜெயிலர் வர்ஷா தோங்கிரி என்பவர் பஸ்தார் சிறையில் ஆதிவாசிப் பெண்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் பற்றி தனது சமூகவலைப் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த பெண்கள் 18 வயதிலும் குறைவான மைனர் பெண்கள் என்றும் அவர்கள் நிர்வாணப்படுத்தி மார்புகளிலும் பெண் உறுப்பிலும் மின்சார தாக்குதல் செய்யப்படுகிறது என்றும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
உடனே அரசு நடவடிக்கை எடுத்தது. ஆம். மைனர் பெண்களை சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அரச இரகசியங்களை கூறியதாக வர்ஷா தோங்கிரி மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உண்மைகளை வெளியில் அம்பலப்படுத்தியமைக்காக இந்திய அரசு அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதேபோன்ற இன்னொரு கொடுமை தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. ஆனால் யாருமே அது பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள்.
நெடுவாசல் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள் என்று வளர்மதி மற்றும் 7 பேர் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கைது செய்யப்பட்டு சிiயில் அடைக்கப்பட்டிருக்கும் வளர்மதி மீது நக்சல்பாரி என்று முத்திரை குத்தி சித்திரவதை செய்யப்படுகிறது.
சிறையில் நிர்வாணமாக்கி சித்திரவதை செய்யப்படுகிறது. நீதிமன்றத்திலோ ஜாமீன் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.
அரசுக்கு எதிராக போராடுபவர்களை நக்சல்பாரிகள் என்று முத்திரை குத்தி சித்திரவதை செய்யப்படுவதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.
இவ்வாறு சித்திரவதை செய்வதன் மூலம் நக்சல்பாரிகளின் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியும் என இந்திய அரசு நினைக்கிறது.
ஆனால் இந்திய அரசு நினைப்பது நடக்கப்போவதில்லை. நக்சல்பாரிகளின் போராட்டம் ஓயப் போவதில்லை.
உழவர் வடிக்கிற கண்ணீரில் தோன்றி
உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி
திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்
இடியாய்ப் பொழிந்தது நக்சல்பாரி
மக்கள் இசையாய்ப் பொழிந்தது நக்சல்பாரி.
மிட்டா மிராசுகளின் கொட்டம் அடக்கி
பட்டாக்களைப் பிடுங்கி நெருப்பில் எறிந்து
பறைதட்டி உழவர் படை கட்டி
இந்தப் பாரெங்கும் பண்ணைகள் மறைகின்ற வரையில்
மறையாது மடியாது நக்சல்பாரி
மரணத்தை வென்றிடும் நக்சல்பாரி.

No comments:

Post a Comment