Tuesday, May 30, 2017

கண்ணீர் புகைக் குண்டுகளாலும் தடியடிகளாலும் மாணவர் போராட்டங்களை அடக்கிவிட முடியாது!

•கண்ணீர் புகைக் குண்டுகளாலும் தடியடிகளாலும்
மாணவர் போராட்டங்களை அடக்கிவிட முடியாது!
இலவசக் கல்வியை வலியுறுத்தியும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிராகவும் மாணவர்கள் இன்று பாரிய போராட்டத்தை கொழும்பில் நடத்தியுள்ளனர்.
ஆயிரக் கணக்கில் மாணவர்கள் ஒன்று திரண்டதால் கொழும்பு நகர் அதிர்ந்தது என்றே கூற வேண்டும்.
மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய அரசோ, மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளது.
இதனால் காயம்பட்ட 21 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 மாணவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஊடுருவியுள்ள இந்திய தனியார் பல்கலைக்கழகங்களை பாதுகாப்பதற்காகவே அரசு மாணவர்களை தாக்கியுள்ளது.
குடி தண்ணீரில் கழிவைக் கலக்கும் இந்திய கம்பனிக்கு எதிராக நீர்கொழும்பு மக்கள் போராடிய போது அவர்களை இராணுவத்தின் மூலம் சுட்டு அடக்கியது இலங்கை அரசு.
இந்திய தனியார் பல்கலைகழகங்களால் இலவச கல்விக்கு ஆபத்து வரப்போவதை உணர்ந்து போராடும் மாணவர்களை பொலிஸ் மற்றும் ராணுவம் கொண்டு அடக்க முனைகிறது இலங்கை அரசு.
மாணவர்கள் அமைதியான வழியில் தமது எதிர்ப்;பை காட்ட முயன்ற வேளை அரசானது வன்முறை மூலம் அதை அடக்க முனைந்துள்ளது.
ஆனால் மாணவர் போராட்டத்தை ஒருபோதும் அடக்கிவிட முடியாது. ஏனெனில் மாணவர் சக்தி அணு குண்டைவிட வலிமையானது.
அதுவும் இலங்கை மாணவர்கள் வீரம் மிக்க போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். இலங்கையில் இத்தனை வருடம் இலவசக் கல்வி நீடித்து இருப்பதற்கு அவர்கள் கடந்த காலங்களில் சிந்திய ரத்தமும் செய்த தியாகமுமே காரணமாகும்.
தீப் பொறிகளுடன் சீண்டிப் பாhக்கிறது இலங்கை அரசு. அது பற்றியெரிந்தால் என்னாகும் என்பதை விரைவில் அரசு கண்டு கொள்ளும்.
அவதானிப்பு-
(1) தமிழ் மக்களை கொன்று குவித்த அதே பொலிசும் ராணுவமும்தான் இன்று மாணவர்களையும் தாக்கியுள்ளது.
(2) சிங்கள தமிழ் முஸ்லிம் அனைத்து இன மாணவர்களும் ஒன்று திரண்டு போராடியிருக்கிறார்கள்.
(3) மாணவர்கள் தனித்து போராடாமல் மக்களையும் இணைத்து போராட வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது.
(4) இந்திய நலன்களைக் காப்பதற்காக தனது சொந்த மக்களையும் சுட்டுக் கொல்ல பொலிசும் ராணுவமும் தயங்காது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
.
(5) அமைதி வழியில் பொராடினால் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் தீர்வு கிடைக்காது என்பது உணரப்பட்டுள்ளது.
குறிப்பு- இந்த போராட்டம் ஜந்து முக்கிய விடயங்களை மாணவர்களுக்கு கற்று கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment