•தோழர் வளர்மதி ஜாமீனில் விடுதலை!
நெடுவாசல் மக்கள் போராட்டத்திற்கு அதரவு தெரிவித்தமைக்காக கைது செய்யப்பட்ட தோழர் வளர்மதி மற்றும் தோழர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் போராட்டத்தை ஆதரித்தமைக்காக கைது செய்தது மட்டுமன்றி சிறையில் நிர்வாணப்படுத்தப்பட்டு தனிமை செல்லில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.
35 நாட்கள் கொடிய சிறைவாசத்தின் பின்னர் தோழர் வளர்மதி மற்றும் தோழர்கள் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட தோழர் வளர்மதி சிறையில் நடந்த கொடுமைகள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 10.03.2014 யன்று கைது செய்யப்பட்ட தோழர்கள் திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின், கார்த்திக் ஆகிய ஆறுபேரும் மூன்று வருடங்களுக்கு மேலாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணையை முடிக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்வதுடன் இவர்களுக்கு ஜாமீன் வழங்காமலும் அடைத்து வைத்திருக்கின்றனர்.
மக்களுக்காக போராடுபவர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பதன் மூலம் அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிட முடியும் என மத்திய மாநில அரசுகள் நம்புகின்றன.
ஆனால் தமக்காக போராடுபவர்களை மகக்ள் ஒருபோதும் கைவிட்டுவிட மாட்டார்கள். அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்வார்கள்.
நேற்று தோழர் விவேக் 5 வருட சிறைவாசத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இன்று தோழர் வளர்மதி 35 நாட்கள் சிறைவாசத்தின் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்..
நாளை 3 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் மதுரை தோழர்கள் 6 பேர் விடுதலை செய்யப்படுவார்கள்.
இது தொடரும் …..
No comments:
Post a Comment