Tuesday, May 30, 2017

•ஆங்கிலேய அரசும் இந்திய அரசும்!

•ஆங்கிலேய அரசும் இந்திய அரசும்!
ஆங்கிலேய அரசு இலங்கையில் தண்டவாளம் அமைத்து தந்தது. ரயில் போக்குவரத்தை ஆரம்பித்து வைத்தது. விமான நிலையம் , துறைமுகங்களை கட்டி தந்தது. தார் வீதிகளை அமைத்து தந்தது. கல்வியைகூட தந்தது.
இருப்பினும் ஆங்கிலேய ஆதிக்கம் இலங்கையில் தொடர்வதற்கு மக்கள் அனுமதிக்கவில்லை. அதனை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றார்கள்.
ஆனால் இந்தியா 10 ஆயிரம் வீடு தருவதையும் இந்திய பிரதமர் வருகை தருவதையும் மலையக இனத்தின் வரலாற்று நிகழ்வாக சிலர் சித்தரிக்கின்றனர்.
ஆங்கிலேய அரசு எப்படி தனது நலன்களுக்காக சில அபிவிருத்திகளை இலங்கையில் செய்ததோ அNதுபோன்றுதான் இந்தியாவும் தனது அக்கிரமிப்பு நலன்களுக்காகவே சில உதவிகளை செய்கிறது.
ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் காலத்தில் ஜப்பான் அரசு ரின் மீன் அன்பளிப்பாக தந்ததை அன்று பலர் புகழ்ந்தனர். ஆனால் அது எமது காலி கடலில் பிடித்த மீன்களில் ஒருபகுதி என்பதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.
இன்றும்கூட இந்தியாவில் பல மக்கள் கக்கூஸ் வசதி கூட இல்லாத நிலையில் இருக்கும்போது இலங்கையில் 60 ஆயிரம் வீடுகளை இந்திய அரசு எதற்காக கட்டி தருகிறது என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை.
2009ல் 50 ஆயிரம் வீடுகள் கட்டி தருவதாக இந்திய அரசு வாக்குறுதியளித்தது. இன்னும் கட்டி தரவில்லை. இதற்கிடையில் இந்த வீடுகளை பெறுவதற்கு பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக இந்திய தூதரே ஓத்துக்கொண்டுண்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனவே மலையகத்தில் கட்டி தருவதாக கூறப்படும் 14 ஆயிரம் வீடுகள் எப்போது கட்டி தரப்படும் என்பதோ அல்லது அதைப் பெறுவதற்கு என்ன லஞ்சம் கொடுக்க வேண்டி வரும் என்பதோ தெரியவில்லை.
மோடி இலங்கை வருவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்காவை அழைத்து திருமலை எண்ணணெய் குத ஒப்பந்தம் போட மயற்சி செய்தார். ஆனால் அது ஒருமித்த தொழிற் சங்கங்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
அடுத்து மோடி வருகையின் போது எட்கா என்னும் பொருளாதார ஆதிக்க ஒப்பந்தம் கைசாத்திடப்படும் என கூறப்பட்டது. அதுவும் மக்களின் எதிர்பால் கைவிடப்பட்டுள்ளது.
இறுதியாக தனது நாட்டில் இருந்து கறுப்பு பூனைகளை கொண்டு வந்து அதன் பாதுகாப்பில் இருந்துவிட்டு சென்றிருக்கிறார் பிரதமர் மோடி.
மோடி இதுவரை பல நாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால் எந்த நாட்டிற்கும் தனது கறுப்பு பூணையையோ அல்லது பாரிய கெலிகப்டர்களையோ கொண்டு சென்றதில்லை.
தனது எதிரி நாடான பாகிஸ்தான் சென்றபோதும்கூட இத்தனை பாதுகாப்பை அவர் கொண்டு சென்றதில்லை.
ஆனால் இலங்கை என்ற சிறிய நாட்டிற்கு இத்தனை பாதுகாப்புடன்தான் அவரால் வரமுடிகிறது எனில் இலங்கையில் அவருக்கு அளிக்கப்பட்டது வரவேற்பா அல்லது எதிர்ப்பா என்பதை புரிந்து கொள்ளலாம்.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றுபடுவதை குழப்புவதற்காகவே மலையக மக்களுக்கு இந்திய அரசு திடீரென்று உதவியளிக்கிறது.
அற்ப சலுகைகளுக்காக மலையக தலைவர்கள் இந்தியாவுக்கு சோரம் போகலாம். ஆனால் மலையக மக்கள் ஒருபோதும் இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை போக மாட்டார்கள்.
இதை எடுத்துக்கூற வேண்டிய நம்மவர்கள், மோடிக்கு பிக்குகள் எழுந்து மரியாதை செய்யவில்லை என்று முட்டாள்தனமான பதிவுகளை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment