•லண்டனில் அம்மனுக்கு கும்பாபிஷேகம்
கிளிநொச்சியில் விபச்சார பெண்கள் கைது !!
கிளிநொச்சியில் விபச்சார பெண்கள் கைது !!
லண்டனில் ஓடுகின்ற பஸ்களில் விளம்பரங்கள் ஒட்டப்படுவது வழமையானதுதான். இதற்காக பெரும் தொகையான பணத்தை பஸ் நிறுவனங்கள் பெற்றுக் கொள்வதும் யாவரும் அறிந்ததுதான்.
ஆனால் வழமைக்கு மாறாக ஒரு விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. ஆம் வடக்கு லண்டனில் உள்ள நாகபூசனி அம்மனின் கும்பாபிஷேக விளம்பரமே அது.
அம்மன் கடவுளுக்கு செய்யும் கும்பாபிஷேகத்திற்கு எதற்காக கட்டணம் செலுத்தி லண்டன் பஸ்சில் விளம்பரம் செய்யப்படுகிறது?
இந்தப் பணத்தை ஊரில் உள்ள வறிய மக்களுக்கு கொடுத்து உதவி செய்யலாமே? அந்த அம்மன் கடவுள்கூட அதைத்தானே விரும்புவார் என்று மத அறிஞர்கள் கூறுகிறார்கள்.
கடந்த வாரம் கிளிநொச்சியில் ஒரு கிராமத்தில் சில பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டடதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒருபுறத்தில் பெண் தெய்வமான அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் அதேவேளை இன்னொருபுறம் பெண்கள் விபச்சார குற்றச்சாட்டில் கைது செயய்ப்படுவது அந்த அம்மன் கடவுளுக்கே அவமானம் இல்லையா?
கொடிய யுத்தம் நடந்தபோதுகூட கிளிநொச்சியில் இப்படி விபச்சாரம் நடைபெற்றதாக எந்த செய்திகளும் இல்லை. இப்போது யுத்தம் முடிந்து 8 வருடங்களின் பின்னர் சில பெண்கள் விபச்சாரம் செய்யும் நிலை தோன்றியிருப்பின் இதற்கு யார் பொறுப்பு?
கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் பெண்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். வேறு வழியின்றி இந்த தொழிலை செய்திருக்கிறார்கள். அவர்களை கைது செய்து தண்டனை கொடுப்பதன் மூலம் இதனை தடுத்துவிட முடியாது.
ஏனெனில் அவர்கள் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி வந்த பின்பும் வேறு வழியின்றி இந்த தொழிலைத்தான் மீண்டும் செயய்ப்போகிறார்கள்
இலங்கையில்; கிட்டத்தட்ட 40,000 பாலியல் தொழிலாளிகள் காணப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 100சிறுவர்கள் பாலியல் நோக்கில் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
பாலியல் தொழில் உள்ளிட்ட 30,000 க்கு மேற்பட்ட “சிறுவர் பாலியல் வன்முறைச் சம்பவங்கள்” பொலிசிடம் பதிவாகியுள்ளன.
பொலிஸ் தரப்புப் பதிவுகளை ஆதாரம் காட்டும் தகவல்களின்படி 10,000 - 15,000 சிறுவர்கள் பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்டுள்ளனர்.
விபச்சார விடுதிகளில் ஆறு தொடக்கம் பதின்னான்கு வயதுடைய 100,000 சிறுவர் பாலியல் தொழிலாளிகள் காணப்படுகின்றனர் எனவும் சொல்லப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல பௌத்த மதத்தவர்கள். இவர்களின் நலன் குறித்து இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, இலங்கை நாடு பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே என்று கூறும் பொதுபலசேன பிக்குகளுக்கும்கூட அக்கறை இல்லை.
எனவே தமிழ் பெண்கள மற்றும் சிறுவர்கள் குறித்து தமிழர் தரப்பினரே அக்கறைகொள்ள வேண்டிய நிலை உள்ளது.
லண்டனில் கடவுளுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது மட்டுமன்றி அதற்கு பஸ்சில் விளம்பரம் செய்யும் நம்மவர்கள் இந்தப் பெண்கள் நலன் குறித்து அக்கறை கொள்ள வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
செய்வார்களா?
நாகபூசனி அம்மன் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பாரா?
நாகபூசனி அம்மன் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பாரா?
No comments:
Post a Comment