Tuesday, May 30, 2017

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்.

•தாமதிக்கப்பட்ட நீதி
மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்.
இரண்டு வருடமாகியும் வித்யா கொலைக்கு நீதி வழங்கப்படாமையானது நீதி மறுக்கப்படுவதாகவே அர்த்தமாகும்.
வித்யா என்ற பள்ளி மாணவி பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்ட்ட பொது நாடே கொந்தளித்தது.
தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள முஸ்லிம் இன மக்களும் வித்யா கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
ஜனாதிபதி மைத்திரி சிறிசேனா அவர்கள் யாழ்ப்பாணம் சென்று வித்யா குடும்பத்தவர்களை சந்தித்து விரைவில் விசேட நீதிமன்றம் அமைத்து நீதி பெற்று தருவேன் என உறுதியளித்தார்.
ஜனாதிபதி மைத்திரி அவர்கள் உறுதியளித்தபடி இன்னும் விசேட நீதிமன்றமும் அமைக்கப்டவில்லை. வித்யா கொலைக்கு நீதியும் வழங்கப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று முடிவுறும் தறுவாயில் திடீரென்று வழக்கு கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாகவே வழக்கு கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்ட்டுள்ளதாக சந்தேகம் பிறந்துள்ளது.
இதனால் வித்யா குடும்பத்தவர்கள் மற்றும் இவ் வழக்கில் அக்கறை உள்ளவர்கள் இவ் கொழும்பு மாற்றத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
வடக்கில் வித்யா கொலையை அடுத்து தென்பகுதியில் சேயா என்ற சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அப்போது இலங்கை அரசு “சிறுவர் துஷ்பிரயோக விசேட நீதிமன்றம்” அமைக்கப்போவதாக உறுதியளித்தது.
அந்த உறுதியளிக்கப்பட்ட விசேட நீதிமன்றமும் இன்னும் அமைக்கப்படவில்லை. இது குறித்து அரசுக்கோ அதன் அமைச்சர்களுக்கோ எந்த அக்கறையும் இல்லை.
அவர்களது அக்கறை எல்லாம் இலங்கை வரும் பிரதமர் மோடிக்கு குளவி குத்திவிடக்கூடாது என்பதற்காக மலையகத்தில் உள்ள குளவிக்கூடுகளை கலைப்பதிலேதான் உள்ளது.
என்ன செய்வது? படுகொலை செய்யப்பட்ட வித்யா அவர்களது குடும்பத்து மகளாக இருந்திருந்தால் இப்படி அமைதியாக இருப்பார்களா?

No comments:

Post a Comment