Tuesday, May 30, 2017

•அமைச்சர் மனோ கணேசனின் இரட்டை வேடம்!

•அமைச்சர் மனோ கணேசனின் இரட்டை வேடம்!
அமைச்சர் மனோ கணேசனின் அப்பா வி.பி கணேசன் ஒரு நடிகர். அவர் சினிமாவில் தேவையானால் இரட்டை வேடம் போடலாம். ஆனால் அவர் மகன் மனோ கணேசன் அரசியலில் இரட்டை வேடம் போடுகிறார்.
மனோ கணேசன் ஒருபுறம் மகிந்த ராஜபக்ச செய்த இனப்படுகொலையை கண்டிக்கிறார். அது விசாரிக்கப்பட வேண்டும் என கோருகிறார். மறுபுறத்தில் முஸ்லிம் மக்களை படுகொலை செய்த பிரதமர் மோடியை சந்தித்து கைகுலுக்க துடிக்கிறார்.
தான் யாருக்கும் பயப்படாதவன். தனது கருத்தை வெளிப்படுத்த தயங்காதவன் என்று மனோ கணேசன் தன்னைப் பற்றி கூறி வருகிறார். அது உண்மை என்றால் மோடியின் படுகொலைகள் பற்றிய கருத்தை தைரியமாக மோடியிடம் கூறுவாரா?
பிரதமர் மோடி குஜராத்தில் ஆயிரக் கணக்கில் முஸ்லிம் மக்களை கொன்றவர். அதுமட்டுமன்றி இன்றும்கூட காஸ்மீரில் ஆயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருப்பவர். அவரை வரவேற்கவும் கைகுலுக்கவும் மனோ கணேசனால் எப்படி முடிகிறது?
தான் அரசை விமர்சித்துக்கொண்டுதான் அமைச்சு பதவியில் இருப்பதாக மனோ கணேசன் கூறுகிறார். சிறையில் இருக்கும் மலையக இளைஞர்களை க்கூட விடுதலை செய்விக்க முடியாத அமைச்சு பதவியில் எதற்காக அவர் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்?
மனோ கணேசனின் முன்னணியில் இருக்கும் அமைச்சர் திகாம்பரம் என்பவர் இதொக கட்சி பிரதமர் மோடியை சந்திப்பதை தடுப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இது உண்மை என்றால் ஏன் அவ்வாறு அவர் தடுத்தார் என்பதை மனோ கணேசன் கூறவாரா?

No comments:

Post a Comment