Tuesday, May 30, 2017

•வோட்டு போட்ட மக்கள் வீதிகளில் நின்று போராடுகிறார்கள்.

•வோட்டு போட்ட மக்கள் வீதிகளில் நின்று போராடுகிறார்கள்.
பதவி பெற்ற எம்.பி மார்கள் சொகுசு வாகனங்களை விற்று
கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றார்கள் !
•85வது நாளாக காணாமல் போனவர்களின் உறவுகள் போராடுகிறார்கள்.
•76வது நாளாக கேப்பாப்புலவு மக்களின் வீதி வாழ்க்கை தொடர்கிறது.
•15வது நாளாக இரணைதீவு மக்களின் போராட்டம் தொடர்கிறது.
•55வது நாளாக பன்னங்கட்டி மக்களின் போராட்டம் தொடர்கிறது.
•84வது நாளாக வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது
வோட்டு போட்ட மக்கள் பல நாட்களாக வீதிகளில் நின்று போராடுகிறார்கள். அவர்களுக்கு இன்னும் எந்த தீர்வும் வழங்கப்படவில்லை.
ஆனால் 91 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனத்தை விற்று 3 கோடி ரூபாவுக்கு மேல் பணம் சம்பாதித்துள்ளார்கள்.
மக்கள் குடிக்கும் தண்ணீருக்குகூட வட் வரி அறவிடப்படுகிறது. ஆனால் எம்.பி மார்களுக்கு வரியற்ற சொகுசு வாகனம் வழங்கப்படுகிறது.
இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபா இழப்பு ஏற்படுகிறது. ஆனால் எம்.பி மார்களோ அந்த சொகுசு வாகனத்தை விற்று 3 கோடி ரூபாவுக்கு மேல் பணம் சம்பாதித்துள்ளனர்.
ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் இந்த 91 பாராளுமன்ற உறுப்பினர் பட்டியலில் ஒரு ஜே.வி.பி எம்பி யின் பெயர்கூட இல்லை.
அதுமட்டுமல்ல ஜேவி.பி எம்.பி கள் தமக்கு வழங்கப்படும் சம்பளத்தைக்கூட கட்சியிடம் ஒப்படைக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பணத்தை கட்சிதான் கொடுக்கிறது.
இதுதான் உண்மையாக மக்கள் பிரதிநிகள் கடைப்பிடிக்க வேண்டிய முறையாகும். இந்த முறையை தமிழ் எம்.பி மார்கள் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழ் மக்கள் வற்புறுத்த வேண்டும்.
ஏனெனில் சொகுசு வாகனம் விற்று பணம் பெற்றுக்கொள்ளாத ஒரு தமிழ் எம்.பி யின் பெயரை அறிய முடியவில்லை.
இன்று பாராளுமன்ற உறுப்பினராகி பல கோடிகளை சம்பாதிக்க முடியும் என்பதால்தான் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள்கூட அதனை கைவிட்டு இலங்கையில் வந்து தேர்தலில் போட்டியிட ஆசைப்படுகிறார்கள்.
தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்தவர் தந்தை செல்வா அவர்கள். அவர் இறக்கும்போது அவருக்கு மூவாயிரம் ரூபா கடன் இருந்ததாக கூறுவார்கள். வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் மக்களுக்கு செலவு செய்து கடனாளியாவிட்டார்.
ஆனால் இன்று தமிழரசுக்கட்சியின் தலைவராக இருப்பவர் மாவை சேனாதிராசா. அவர் பெயரும் சொகுசு வாகனம் விற்று 3 கோடி ரூபா பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
அதுமட்டுமல்ல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனன் அவர்களுக்கு கனடாவில் தந்தை செல்வா விருது வழங்கியுள்ளார்கள். ஆனால் இந்த ஈழவேந்தனும் தனது சொகுசு வாகனத்தை விற்று அந்த பணத்தில் கொழும்பில் வீடு வாங்கியுள்ளார்.
தந்தை செல்வாவை இதைவிட கேவலப்படுத்த முடியுமா?

No comments:

Post a Comment