Sunday, July 29, 2018

கட்டுப்பொல் (செம்பனை)

•கட்டுப்பொல் (செம்பனை)
பிரமிளா பிரதீபன் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட “கட்டுப்பொல்” என்னும் நாவல் வெளிவந்துள்ளது.
இலங்கையில் உள்ள கட்டுப்பொல் எனப்படும் செம்பனை பயிர்ச்செய்கை குறித்த முதல் நாவல் இது என்ற பெருமை கொண்டுள்ளது.
மலையகத்தை சேர்ந்த அதுவும் ஒரு பெண் எழுத்தாளரால் செம்பனை செய்கையில் ஈடுபடும் தொழிலாளர் குறித்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
இந்த நாவலின் அறிமுகம் லண்டனில் கடந்த சனிக்கிழமையன்று தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் நடத்தப்பட்டது.
மு.நித்தியானந்தன் அவர்கள் இந் நாவல் குறித்த அறிமுக மற்றும் விமர்சன உரையை நிகழ்த்தினார்.
“கட்டுப்பொல்" என்ற சிங்கள சொல்லுக்கு "முள் தேங்காய்" என .ந் நாவலில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள். ஆனால் மலேசியாவில் பல வருடங்களுக்கு முன்னரே "செம்பனை" என பெயர் இட்டு அதனை பாவித்து வருகின்றனர். அது ஒரு சிறந்த பெயர். எனவே அதனையே பாவிப்பது நல்லது” என நித்தியானந்தன் தன் உரையில் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment