Sunday, July 29, 2018

அறிவாயுதம்” மூலம் தமிழின விடுதலை பெற முடியுமா?

“அறிவாயுதம்” மூலம் தமிழின விடுதலை பெற முடியுமா?
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் “ஆயுதப் போராட்டத்தின் மூலமே தமிழின விடுதலையை அடைய முடியும்” என்றார்.
அதேபோன்று “ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தத்தின் மூலமே தமிழக மக்கள் விடுதலை அடைய முடியும்” என்று தோழர் தமிழரசன் கூறினார்.
ஆனால் “நாம்தமிழர்” கட்சியினர் ஒரு கையில் பிரபாகரன் படத்தை ஏந்திக்கொண்டு மறு கையில் “அறிவாயுதம”; ஏந்தி தமிழின விடுதலையை அடைவோம்; என்கிறார்கள்.
“அறிவாயுதம்” என்பது எதோ இன்னொரு வகை ஏ.கே.47 ஆயுதமாக இருக்குமோ என அப்பாவித்தனமாக நம்ப வேண்டியிருக்கிறது.
ஆனால் இவர்கள் கூறும் “அறிவாயுதம்” என்பது தேர்தல் பாதையையே தவிர வேறு எதுவும் இல்லை.
தேர்தல் பாதையில் பல வருடங்கள் முயன்று பயனற்ற நிலையில்தான் ஈழத்தில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.
தமிழகத்திலும்கூட தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியாது என்பதே கடந்தகாலம் உணர்த்தும் உண்மை.
ஆனால் ஈழத்தில் ஆயுதம் எந்திப் போராடுவதை ஆதரிக்கும் “நாம் தமிழர்” கட்சியினர் தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தை மறுக்கின்றனர்.
அதுமட்டுமன்றி, தேர்தல் பாதை மூலம் ஒரு தமிழன் முதலமைச்சராகினால் தமிழ்நாட்டில் தமிழ் இனம் விடுதலை பெற முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
இது அவர்கள் உயர்த்திப் பிடிக்கும் பிரபாகரனுக்கே முரணானது என்பதை உணர மறுக்கின்றனர்.
தமிழின விடுதலையை பல கட்சிகள், பல இயக்கங்கள் விரும்பலாம். ஆனால் அதை அடைய இரண்டே வழிகளை மட்டுமே அவை முன்வைக்க முடியும்.
ஒன்று அகிம்சை வழியென கூறப்படும்; தேர்தல் பாதை. இன்னொன்று ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதை.
இதில் தேர்தல்பாதை என்பது சரணாகதிப் பாதை ஆகும். ஆயுதம் ஏந்திய போராட்டப்பாதை என்பது புரட்சிப் பாதையாகும்.
மாக்ஸ் முதல் மாவோ வரையிலான அனைத்து மார்க்சிய ஆசான்களும் ஆயுதப் போராட்டத்தின் மூலமே விடுதலை பெற முடியும் என்று கூறியுள்ளனர்.
இவர்கள் எவருமே தேர்தல் பாதை மூலம் விடுதலை பெற முடியும் என்று கூறியதில்லை.
இப்போது கேள்வி என்னவெனில் சீமான் ஆயுதம் ஏந்திய புரட்சிப் பாதையை முன்னெடுக்கப் போகிறாரா அல்லது அறிவாயுதம் ஏந்துவோம் என்று சொல்லி இளைஞர்களை காயடித்து சரணாகதி அடையச் செய்யப் போகிறாரா?

No comments:

Post a Comment