Sunday, July 29, 2018

மத்தல விமான நிலையத்திற்கு ஒரு நியாயம்

• மத்தல விமான நிலையத்திற்கு ஒரு நியாயம்
பலாலி விமான நிலையத்திற்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்திய அரசின் நியாயமா?
தமிழ் மக்களின் பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டபோது பின்வரும் நிபந்தனைகளை இந்தியா விதித்திருந்தது.
(1) இந்திய விமானங்களை தவிர வேறு விமானம் அனுமதிக்க கூடாது
(2) இந்தியா கேட்கும் நேரத்தில் விமான நிலையத்தை ஒப்படைக்க வேண்டும்
தற்போது அம்பாந்தோட்டையில் உள்ள மத்தல விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டதால் இனி இந்தியா ஈழத் தமிழருக்கு உதவும் என எமது தமிழ் ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.
இவர்களுடைய ஆய்வு கூறலுக்கு மாறாக இந்தியா மத்தல விமான நிலையத்தை பெற்றுள்ளது. அதுவும் எந்தவித போர் நடவடிக்கைக்கும் பயன்படுத்தப்படாது என்ற உறுதிமொழியுடன் பெற்றுள்ளது.
இருந்தும்கூட இந்தியாவுக்கு மத்தல விமான நிலையத்தை விற்றுவிட்டதற்காக பிரதமர் ரணில் அவர்களை சிங்கள தலைவர்கள் திட்டுகின்றனர்.
அவர் தன் மனைவியைக்கூட விற்பனைக்கு விட்டுள்ளார் என்று அவர்கள் கேலிச்சித்திரம் வரைகிறார்கள்.
தன்னுடைய முன்னோர்கள் நாட்டுக்கு தமது சொத்துகளை வழங்கினார்கள். அதுபோல்தானும் தன்னுடைய சொத்துகளை நாட்டுக்கு வழங்கப்போவதாக பிரதமர் ரணில் கூறுகிறார்.
அவர் தன் சொத்துகளை நாட்டுக்கு வழங்கிறாரோ இல்லையோ ஆனால் அவர் நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார் என்பது உண்மை.
ரணில் நாட்டை விற்பது குறித்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தர் அய்யா இதுவரை ஒரு வரிகூட கண்டனம் தெரிவித்தது கிடையாது.
ஆகக்குறைந்தது தமிழர் நிலமும் வளமும் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்தாவது அவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.
ஆனால் அவரோ இந்தியா 20 அம்புலன்ஸ் வண்டிகளை தமிழர்களுக்கு தந்துள்ளது என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.
தனது நாட்டில் தன் மக்களுக்கு பிணம் எடுத்தச் செல்லக்கூட அம்புலன்ஸ் வண்டி வழங்காத இந்தியா ஈழத்தமிழருக்கு ஏன் தருகிறது என்று கேள்வி கேட்டால் அதற்கு சம்பந்தர் அய்யா பதில் அளிப்பதில்லை.
தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படும் சம்பந்தர் அய்யாவை சிறந்த ராஜதந்திரி என்று சிலர் புகழ்கின்றனர். அவருக்கு “வாழும் வீரர்” என பட்டம் கொடுக்கின்றனர்.
இப்படி ஒரு முட்டாள் இனம் தமிழ் இனம் தவிர வேறு இனம் உலகில் இருக்க முடியாது!

No comments:

Post a Comment