Sunday, July 29, 2018

சிங்கள தலைவர்கள் ஏன் தமிழக தலைவர்களை பார்த்து அச்சப்படுவதில்லை?

•சிங்கள தலைவர்கள் ஏன் தமிழக தலைவர்களை பார்த்து அச்சப்படுவதில்லை?
உலகில் சிங்களவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 60 இலட்சம். ஆனால் தமிழர்களின் எண்ணிக்கை எட்டுக் கோடிக்கு மேல்.
அதாவது இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் உலகளவில் அவர்கள் தமிழர்களோடு ஒப்பிடும்போது சிறுபான்மையினரே.
அப்படியாயின் கைக்கு எட்டும் தூரத்தில் ஏழரைக் கோடி தமிழர்கள் இருந்தும் சிங்கள அரசால் எப்படி இலங்கையில் 40 ஆயிரம் தமிழ் மக்களை தைரியமாக முள்ளிவாய்க்காலில் கொல்ல முடிந்தது?
இது தமிழக தலைவர்கள் மீது சிங்கள தலைவர்களுக்கு அச்சம் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது?
அச்சம் இல்லை என்றாலும் பரவாயில்லை. தமிழக தலைவர்களை “அரசியல் கோமாளிகள்” என்றல்லவா சிங்கள ராணுவ தளபதி கூறினார்.
அரசியல் கோமாளிகள் என்று சொன்ன பிறகும்கூட தமிழக தலைவர்கள் ஒருவருக்குகூட ரோசம் வரவில்லையே.
இது பற்றி கேட்டால் இந்தியாவில் தமிழக முதல்வருக்கு அதிகாரம் இல்லையே. கலைஞர் என்ன செய்ய முடியும்? என்று சிலர் பதில் கூறுகிறார்கள்.
பங்களாதேஸ் பிரச்சனையின் போது மேற்கு வங்க முதல்வர் “இந்திய அரசு ராணுவத்தை அனுப்ப வேண்டும் இல்லையேல் நான் எனது பொலிசை அனுப்புவேன்” என்று கூறினார்.
அப்போது மேற்கு வங்க முதல்வராக இருந்தவர் காங்கிரஸ்காரர். இருந்தும் அவர் தனது வங்காளி இன உணர்வுடன் நடந்துகொண்டார்.
முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது தமிழக முதல்வராக கலைஞர் இருந்தார். அவர் ஈழத் தமிழர்களை காப்பாற்றும்படி இந்திய அரசிடம் கோரவில்லை. மாறாக தன் பிள்ளைகளுக்கு அமைச்சு பதவி தரும்படி கோரினார்.
அதனால்தான் சிங்கள தலைவர்களுக்கு தமிழ் தலைவர்கள் மீது அச்சம் வருவதில்லை.
ஈழத்திலும்சரி தமிழகத்திலும்சரி தமிழ் தலைவர்களாக இருப்பவர்கள் பணத்திலும் பதவியிலும்தான் அக்கறை கொண்டவர்கள் என்பதை சிங்கள தலைவர்கள் நன்கு அறிவார்கள்.
அதனால்தான் தமிழர்களை கொன்ற ரத்தக்கறையோடு தமிழக தலைவர்களான கனிமொழி, திருமாவளவன், டி.ஆர்.பாலு போன்றவர்களுடன் மகிந்த ராஜபக்சவினால் கைகுலுக்க முடிந்தது.

No comments:

Post a Comment