Sunday, July 29, 2018

அதிசயம். ஆனால் உண்மை.

அதிசயம். ஆனால் உண்மை.
மலையாளிகளும் பார்ப்பணர்களும் ஆதிக்கம் செலுத்தும் இசை உலகில் ஒரு தமிழன் வெல்ல முடியுமா?
அதுவும் தமிழனின் நாட்டுப்புறப்பாடல்களை பாடி ஒரு தமிழன் வெல்ல முடியுமா?
ஆம். முடியும் என தமிழ் மக்கள் காட்டியுள்ளனர்.
ஏற்கனவே எழுதிய ஸ்கிரிப்ட் படியே போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றனர் சிலர்.
மக்கள் இசைப் பாடல்களை ரேட்டிங்கிற்காக பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒருபோதும் வெற்றி பெற விட மாட்டார்கள் என்றனர் இன்னும் சிலர்.
ஆனால் இதை எல்லாம் தாண்டி ஒரு மக்கள் இசைப் பாடகரை தமிழ் மக்கள் வெல்ல வைத்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?
இது ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் ஏற்பட்ட தமிழ்மக்களின் எழுச்சி என்றார் நடிகர் விஜய் சேதுபதி.
இது சீமான் , திருமுருகன்காந்தி போன்றோர் 2009 முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பின் தமிழ் மக்கள்; மத்தியில் விதைத்த தமிழ் தேசியத்தின் எழுச்சி என்று சிலர் கூறு முனையலாம்.
இது தோழர் தமிழரசன் விதைத்த தமிழ்தேசியம் முளைக்க ஆரம்பித்துள்ளது என்று வேறு சிலர் கூற முனையலாம்.
ஆனால் தமிழ் மக்களின் விழிப்புணர்வும் எழுச்சியும் இல்லையேல் இது நடந்திருக்க வாயப்பில்லை என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
இது ஏதோ டிவியில் நடக்கும் நிகழ்ச்சி என்று ஒதுங்கியிருக்காமல் ஆரம்பம் முதலே மக்கள் இசைப் பாடகர்களுக்கு தம் அமோக ஆதரவை மக்கள் காட்டினார்கள்.
அதனால்தான் தமிழ் மக்களின் மக்கள் இசைப் பாடல்களைவிட கர்நாடக சங்கீதம் உயர்ந்தது என்று தமிழ் மக்கள் மூலமே காட்ட முனைந்த சூழ்ச்சியை அவர்கள் முறியடித்தார்கள்.
இதுவரை நடந்த போட்டிகளைவிட இம்முறை அதிகளவு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.
அதேபோல் இதுவரை வென்றவர்களைவிட இம்முறை வென்ற மக்கள் இசைப்பாடகர் அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளார்.
டிவி நிறுவனமோ அல்லது எந்தவொரு சக்தியோ தீர்ப்பில் எந்தவொரு மாற்றத்தையோ ஏற்படுத்த முடியாதபடி மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளனர் தமிழ் மக்கள்.
இது மக்கள் இசைப் பாடகருக்கு கிடைத்த வெற்றி என்றாலும் உண்மையில் இது தமிழ் மக்களின் இன உணர்விற்கு கிடைத்த வெற்றி.
தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள் என்ற செய்தி இந்த வெற்றி மூலம் உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இனம் தலை நிமிர ஆரம்பித்துவிட்டது. இனி இதுபோன்று பல அதிசயங்கள் தொடரும்.

No comments:

Post a Comment