Sunday, July 29, 2018

•“மக்கள் அதிகாரம்” அமைப்பு ஆயுதம் ஏந்துமா?

•“மக்கள் அதிகாரம்” அமைப்பு ஆயுதம் ஏந்துமா?
அல்லது போராட்டத்தை காட்டிக் கொடுக்கப் போகிறதா?
1986ல் தோழர் தமிழரசன் மருதையாற்று பாலத்தை குண்டு வைத்து தகர்த்தபோது அதனை போஸ்டர் அடித்து கண்டித்தவர்கள் புரட்சிகர அமைப்பாகிய மகஇக வினர்.
தேர்தல்பாதையில் ஈடுபட்ட பிற்போக்கு அரசியல்வாதிகளே மௌனம் சாதித்தபோது புரட்சி அமைப்பு என்று கருதப்பட்ட மகஇக அமைப்பின் இச் செயல் ஒரு காட்டிக்கொடுப்பாகவே எனக்கு தோன்றியது.
இது குறித்து தோழர் தமிழரசனிடம் நான் கேட்டபோது அவர் தனக்கே உரிய பாணியில் சிரித்துக்கொண்டு “பொலிஸ் தங்களைப் பிடித்துவிடும் என்ற பயத்தில் இப்படி செய்கிறார்கள். அதை நாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை” என்றார்.
மக்கள் தயார் இல்லாதபோது ஆயுதம் ஏந்துவது தனிநபர் பயங்கரவாதமாகிவிடும் என்றும் பொலிஸ் மக்களை துன்புறுத்த வழி வகுத்துவிடும் என்றும் அப்போது மகஇக வினர் கூறினார்கள்.
இப்போது 32 ஆண்டுகள் கழித்த பின்பும் அவாகள்; ஆயுதம் ஏந்தவில்லை. மக்களை திரட்டி அறவழியிலேயே தூத்துக்குடியில் போராடினார்கள். ஆனாலும் பொலிஸ் அவர்களை நசுக்கிறது.
அவர்களின் “மக்கள் அதிகாரம்” ஆயுதம் எந்தாமல் அறவழியில் போராடியிருந்தும் அவர்களை சமூகவிரோதிகள் என்று தமிழக அரசும் ஊடகங்களும் கூறுகின்றன.
இவ் அமைப்பை சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டு தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.
“இவர்கள் தங்களை மூளைச்சலவை செய்து போராட்டத்தில் ஈடுபட வைத்தனர்” என்று மக்களை மிரட்டி பொலிஸ் வாக்குமூலம் வாங்குகிறது.
மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி இரண்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
மக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். மக்களை பொலிஸ் மிரட்டி ஒடுக்கிறது.
மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய “மக்கள் அதிகாரம்” அமைப்பு தன்னை சமூகவிரோத அமைப்பு என்று எழுதவேண்டாம் என தினமலர் பத்திரிகையிடம் கேட்கும் அவல நிலையில் உள்ளது.
அரசு வன்முறையை ஏவினால் அதே வன்முறை மூலம் பதில் அளிக்க வேண்டும். இதன் மூலமே மக்களின் நம்பிக்கையை போராளிகளால் பெற முடியும்.
இதையேதான் தோழர் தமிழரசன் மற்றும் அவரைத் தொடர்ந்து தோழர் லெனின் போன்றவர்கள் செய்தார்கள்.
இப்போதுள்ள கேள்வி அரசு வன்முறைக்கு எதிராக “மக்கள் அதிகாரம்” அமைப்பு என்ன வடிவில் பதில் அளிக்கப் போகிறது என்பதே.

No comments:

Post a Comment