Sunday, July 29, 2018

காயம் இல்லாமல் கனவு காணலாம்- ஆனால் வலிகள் இல்லாமல் வெற்றி பெற முடியாது!!

•காயம் இல்லாமல் கனவு காணலாம்- ஆனால்
வலிகள் இல்லாமல் வெற்றி பெற முடியாது!!
“துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்றார் மாபெரும் ஆசான் மாசேதுங்
அடக்குமுறையான முதலாளித்துவ வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறை போராட்டத்தால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்றார் தோழர் சண்முகதாசன்.
அடிமையாக இருக்கும் தமிழக மக்கள் தமது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதே ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு செய்யும் உதவியாகும் என்று தோழர் தமிழரசன் கூறினார்.
ஆனால் தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்கள் அரசியல் அதிகாரத்தை பெற முடியும் என இப்போது சிலர் கூறுகின்றனர்.
அதுவும் ஒரு தமிழன் தமிழக முதல்வரானால் தமிழக மக்கள் மட்டுமல்ல ஈழத் தமிழர்களும் விடுதலை பெற வழி சமைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே அது செயற்படும்.
இது உண்மைதான் என்பதை அண்மையில் தமிழ் முதல்வர் பழனிச்சாமி ஒரு காப்ரேட் கம்பனிக்காக 13 அப்பாவி தமிழ் மக்களை சுட்டுக்கொன்றதை கண்டோம்.
ஆளும் வர்க்கத்தின் பலாத்காரத்திற்கு எதிராக ஆளப்படும் வர்க்கம் எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்காமல் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்ற உண்மையை தமிழகத்தில் இப்போது நன்கு உணர முடிகிறது.
இவ்வாறு ஆயுதம் ஏந்த துடிக்கும் இளைஞர்களை ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் தங்கள் உணர்சிப் பேச்சின் மூலம் காயடிக்கின்றனர்.
கடந்த நான்கு வருடத்தின் முன்னர் வைகோ அவர்கள் தான் தனிநாடு கோருவேன் என்றும் ஆயுதம் ஏந்துவேன் என்றும் உணர்ச்சிகரமாக பேசினார். (அவருடைய பேச்சு பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது)
அவர் இதுவரை ஆயுதம் எந்தவில்லை என்பது மட்டுமல்ல இனியும் அவர் ஆயுதம் ஏந்தப் போவதில்லை.
ஈழத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய பிரபாகரனை ஆதரிக்கும் வைகோ அவர்கள் தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் தமிழரசனை ஆதரிப்பதில்லை மட்டுமன்றி அவர் பெயரைக்கூட உச்சரிப்பதில்லை.
இதுதான் ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம்!

No comments:

Post a Comment