Sunday, July 29, 2018

•சம்பூர்- தொடரும் சோகம்!

•சம்பூர்- தொடரும் சோகம்!
இறந்தவர்களுக்காக அழுவதற்கோ அன்றி
அவர்களுக்காக ஒரு நினைவு கல்லை இடுவதற்குகூட
சம்பூர் மக்களுக்கு உரிமை இல்லையா?
முள்ளிவாய்க்காலில்கூட ஒன்றுகூடி நினைவு தினம் அனுட்டிக்க அனுமதிக்கும் இலங்கை அரசு சம்பூர் மக்கள் தம் இழந்த உறவுகளை நினைவுகூர தடுக்கிறது.
7.7.90 யன்று 150 க்கு மேற்பட்ட சம்பூர் மக்களை இலங்கை ராணுவம் கொன்று அழித்தது.
படுகொலை செய்யப்பட்ட அம் மக்களுக்கு ஒரு நினைவு கல் வைத்து நினைவுகூர சம்பூர் மக்கள் விரும்புகின்றனர்.
ஆனால் இலங்கை ராணுவத்தின் புலனாய்வாளர்கள் அதை தடுத்ததுடன் அதற்கு முயன்றவர்களைவ வீடு வீடாக சென்று மிரட்டுகின்றனர்.
முள்ளிவாய்க்காலில் நினைவு தினம் நடத்த போட்டிபோட்ட எமது தலைவர்களும் அம் மக்களுக்கு உதவ முன்வரவில்லை.
ஒருபுறம் முஸ்லிம் மக்களுக்கு வீட்டுத்திட்டம் என்று தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்படுகிறது.
இன்னொருபுறம் கடற்படை முகாமில் தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகின்றன.
அதைவிட அனல்மின் நிலையம் பெயரில் தமிழ் மக்களின் பல ஏக்கர் நிலம் இந்தியாவினால் அபகரிக்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் நடுவில் அம் மக்கள் தம் இறந்துபோன உறவுகளுக்கு அஞ்சலி செய்வதும் தடுக்கப்படுகிறது.
அவர்கள் தமிழ் மக்கள் இல்லையா? ஏன் தமிழ் தலைவர்கள் அவர்கள் மீது அக்கறை கொள்வதில்லை?
இத்தனைக்கும் இது தமிழர் தலைவர் சம்பந்தர் அய்யாவின் சொந்த தொகுதியில் உள்ள ஊர்.
தனது தொகுதியில் உள்ள மக்களின் பிரச்சனையில்கூட ஏன் சம்பந்தர் அய்யாவினால் அக்கறை கொள்ள முடியவில்லை?
அடுத்த தேர்தலுக்கு இந்த மக்களிடம் எந்த முகத்துடன் வோட்டு கேட்டு வரப் போகிறார்?

No comments:

Post a Comment