Sunday, July 29, 2018

•தோழர் மனோ மாஸ்டரை நினைவில் கொள்வோம்!

•தோழர் மனோ மாஸ்டரை நினைவில் கொள்வோம்!
மனோ மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட துரைராசா பஞ்சலிங்கம் அவர்களின் 34வது நினைவுநாள் இன்று ஆகும்.
அவர் 22.07.1984 யன்று புலிகள் இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
கம்பர்மலையை பிறப்பிடமாக கொண்ட மனோமாஸ்டர் ஆரம்பத்தில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இயங்கினார்.
பின்னர் புலிகள் இயக்கம் இரண்டாக பிளவுபட்டபோது இவர் பிரபாகரன் தலைமையிலான அணியினருடன் செயற்பட்டார்.
ஆனால் பிரபாகரன் அணியினர் தங்கத்துரை குட்டிமணி அணியினருடன் சேர்ந்து இயங்கியது பிடிக்காததால் அதில் இருந்து பிரிந்து வந்தார்.
அதன்பின்னர் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராக இருந்தார்.
போல்ஷிவிக் கட்சி வரலாறு புத்தகத்தை தந்து என்னை மார்க்கிச நூல்களை படிக்கும் ஆர்வத்தை எற்படுத்தியவர் மனோ மாஸ்டரே.
மக்களுடன் சேர்ந்து பழகுவதற்கு பண்ணைகள் வேண்டும் எனக்கூறி நெடுங்கேணியில் நாங்கள் பண்ணை அமைப்பதற்கும் வித்திட்டவர் மனோ மாஸ்டரே.
அதுமட்டுமல்ல எமது பண்ணைக்கு தனது வீட்டில் இருந்து 5 அந்தர் முளை வெங்காயத்தை இலவசமாக தந்து உதவியவரும் அவரே.
1983 இனக் கலவரத்தின் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை அடுத்து அவர் ரெலோ அமைப்பில் சேர்ந்து செயற்பட்டார்.
அதன்பின் ரெலொ அமைப்பிற்குள் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து ரெலோவில் இருந்தும் விலகினார்.
இந் நிலையில் அவர் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப விரும்பினார். நாங்களே அவரை வேதாரணியத்தில் இருந்து கொண்டு வந்து பருத்தித்துறையில் விட்டோம்.
பருத்தித்துறையில் இருந்து அவர் சையிக்கிளில் செல்லும்போது வடஇந்து கல்லூரியடியில் புலிகள் இயக்கத்தினர் அவரை சுட்டுக் கொன்றனர்
மார்க்சிய லெனிய மாசேதுங் சிந்தனையாளரான மனோ மாஸ்டரின் இழப்பு ஒரு பேரிழப்பாகும்.
அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தக் கொண்டிருந்தார். அவர் விரும்பியிருந்தால் ஒரு பட்டதாரியாகி நல்ல உத்தியோகம் பெற்றிருக்கலாம்.
அல்லது அவர் விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் வெளிநாட்டிற்கு வந்து வசதியான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் அவரோ தமிழ் மக்களின் விடுதலைக்காக போராட்ட வாழ்வை தேர்ந்தெடுத்தார். தமிழ் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தார்.
தோழர் மனோ மாஸ்டரை நினைவில் கொள்வோம்.

No comments:

Post a Comment