Sunday, July 29, 2018

தனது மக்களுக்கு அம்புலன்ஸ் வழங்காத இந்தியா இலங்கை மக்களுக்கு வழங்க முன்வருவது ஏன்?

•தனது மக்களுக்கு அம்புலன்ஸ் வழங்காத இந்தியா
இலங்கை மக்களுக்கு வழங்க முன்வருவது ஏன்?
இந்தியாவில் சொந்த மக்கள் அம்புலன்ஸ் வசதி இன்றி செத்துக்கொண்டிருக்கும்போது இலங்கை மக்களுக்கு அம்புலன்ஸ் வண்டிகளை இந்தியா வழங்குகிறது.
கடந்த ஆண்டு கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களுக்கு இந்த உதவியை வழங்கிய இந்தியா இப்போது யாழ் மாவட்டத்திற்கு செய்ய முன்வந்துள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி முதல் வடமாகாணத்தில் இந்திய அரசின் உதவியுடன் அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பிக்கப்பட இருப்பதாக அமைச்சர் குணசீலன் தெரிவித்துள்ளார்.
இந்த சேவைக்கு இந்தியா 20 அம்புலன்ஸ் வண்டிகளை தந்து உதவுவதாக வடமாகாண அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் என்ன நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த உதவிகளை இந்தியா வழங்கிறது என்பதை இந்த அமைச்சர் மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை.
ஏனெனில் எற்கனவே பெற்றோலிய நிலையங்களுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் நாட்டின் பெற்றோலிய கட்டுப்பாடு இந்தியாவின் கைகளுக்கு சென்றுவிட்டது.
தற்போது அவசர தேவையான அம்புலன்ஸ் சேவையும் இந்தியாவின் கைகளுக்கு செல்கிறதா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்படுகிறது.
இம் மாதம் 10ம் திகதி பலாலி விமான நிலையம் உதவி என்னும் பெயரில் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறது.
அடுத்து காங்கேசன் துறைமுகமும் சீமெந்து தொழிற்சாலையும் உதவி என்னும் பெயரில் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல இருக்கிறது.
ஏற்கனவே திருமலை துறைமுகமும் எண்ணெய் குதமும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது.
கொழும்பு சிட்டியையும்; அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் சீனா ஆக்கிரமித்துவிட்டது என்று நம் தலைவர்கள் கூக்குரல் இடுகிறார்கள்.
ஆனால் அதே தலைவர்கள் தமிழரின் நிலத்தையும் வளத்தையும் இந்திய ஆக்கிரமிப்பிற்கு போட்டி போட்டு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment