Sunday, July 29, 2018

•நாம், மற்றவர் மீது குற்றச்சாட்டு வரும்போது நீதிபதியாகவும் எம்மீது குற்றச்சாட்டு வரும்போது வக்கீலாகவும் மாறுகிறோம்!

•நாம்,
மற்றவர் மீது குற்றச்சாட்டு வரும்போது நீதிபதியாகவும்
எம்மீது குற்றச்சாட்டு வரும்போது வக்கீலாகவும் மாறுகிறோம்!
சிறுமி பாலியல் வல்லுறவு சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு எவ்வித விசாரணையும் இன்றி பலரும் பலவிதமான தண்டனைகளை தெரிவித்து வருகின்றனர்.
அதுவும் சினிமா உலகத்தினர் ஒரு படி மேலே சென்று கொடுமையான தண்டனைகளை தெரிவிக்கின்றனர்.
பிரபல நடிகர் பார்த்திபன் இந்த 17 பேரின் ஆண் உறுப்பை அறுத்து எறிய வேண்டும் என கேட்டுள்ளார்.
எந்தவித விசாரணையும் செய்யாமலே ஆண் உறுப்பை வெட்ட வேண்டும் என்று இந்த நடிகர் கோருகிறார்.
ஆனால் இதே சினிமா நடிகர்கள் மீது நடிகை சிறீரெட்டி தெரிவிக்கும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து இவர் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
ஏன் இவரால் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான நடிகர்களின் ஆண் உறுப்பை வெட்டி எறிய வேண்டும் என்று கூற முடியவில்லை?
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரும் நடிகர் சங்கத் தலைவர் விஷால், நடிகை சிறீரெட்டி மீது பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரவில்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோராவிட்டாலும் பரவாயில்லை மாறாக தன்னை விஷால் மிரட்டுவதாக அல்லவா சிறீரெட்டி கூறுகிறார். மிரட்டுவது என்ன நியாயம்?
ஒருபுறம் பாலியல் குற்றத்திற்கு தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதிகளாக செயற்படும் நடிகர்கள் தம் மீது அதே குற்றச்சாட்டு வரும்போது மௌனமாக இருப்பது ஏன்?
நடிகை சிறீரெட்டி பகிரங்கமாக தன்னை பாலியல் வன்புணர்வு செய்தவர்களின் பெயர்களை கூறி வருகிறார்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி அரை நிர்வாண போராட்டமும் நடத்தியிருக்கிறார்.
இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல புகார் தெரிவிக்கும் நடிகையை “தேவடியாள்” என கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர்.
அதுமட்டுமல்ல பத்திரிகைகள்கூட இவரிடம் உங்களுக்கு எயிட்ஸ் இல்லையா? என கிண்டலாக கேள்வி கேட்கின்றன.
ஏன் இந்த பத்திரிகைகளால் சிறீரெட்டி கூறிய நடிகர்களிடம் சென்று உங்களுக்கு எயிட்ஸ் இல்லையா என்று கேட்க முடியவில்லை?
இங்கு ஆண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு ஆண்களே நீதி வழங்குகின்றனர். அதனால்தான் பெண்களுக்கு உரிய நீதி இன்னும் கிடைக்கவில்லை.
பெண்கள் தமக்குரிய நீதியை தாமே எடுத்துக்கொள்ளும் நிலை தோன்ற வேண்டும்!
குறிப்பு-
சில மாதங்களுக்கு முன்னர் காஸ்மீரில் ஒரு எட்டு வயது சிறுமி எட்டு நாட்களாக கோயிலினுள் வைத்து பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்டார். அப்போது இந்த நடிகர்கள் யாரும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஆண் உறுப்பை வெட்ட வேண்டும் என கூறவில்லை. அது ஏன்? கொல்லப்பட்ட சிறுமி முஸ்லிம் என்பதாலா?

No comments:

Post a Comment