Sunday, July 29, 2018

ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்துவிட முடியாது!

ஓடாத மானும்
போராடாத இனமும்
வாழ்ந்துவிட முடியாது!
வரலாறு எப்போதும்
வென்றவனையும் பதிவு செய்யும்.
தோற்றவனையும் பதிவு செய்யும்.
ஆனால் ஒருபோதும்
போட்டியிடாதவனை பதிவு செய்யாது.
காணாமல்போனவர்களின் உறவுகளின் போராட்டம்
500வது நாளை எட்டியுள்ளது.
தமது உறவுகளை இவர்கள் கண்டுபிடிக்கிறார்களோ இல்லையோ
ஆனால் வரலாற்றில் இவர்கள் போராட்டம் நிச்சயம் இருக்கும்
இது ஒரு நடிகர் படம் என்றால்
நிச்சயம் கட்அவுட் வைத்து கொண்டாடியிருப்பார்கள்
ஆனால் இது உறவுகளை இழந்தவர்களின் வலி
அவர்களுக்கு கோயில் வாயிலில் இருந்து
கடவுளிடம் முறையிடவும் உரிமை இல்லையா?
என்ன கொடுமை இது?
இராணுவம்கூட போராட அனுமதிக்கிறது.
ஆனால் கோயில் நிர்வாகம் தடுக்கிறதே
சிங்கள அமைச்சர் வந்தால் ஓடிச் சென்று வரவேற்கும் நிர்வாகம்
இராணுவ தளபதிகள் வந்தால் கைகட்டி வரவேற்கும் நிர்வாகம்
போராடும் வயதான பெண்மணிகள் வந்தால் தடுப்பது ஏன்?
முருகா!
நீகூட சூரனை போராடிதானே கொன்றாய்
அப்படியிருக்க உன் வாசலில் போராடும் தாய்மாருக்கு
இடம் இல்லை என்றுகூற இடையில இவனுகள் யார்?
உன் கையில் இருக்கும் வேலைக் கொடு
இந்த கும்பலை குத்தி கிழித்து சங்காரம் செய்ய வேண்டும்.
குறிப்பு- பக்தர்களுக்கு ஒரு கேள்வி
செல்வசந்நிதி முருகன் கோவிலில் பார்ப்பண ஜயர் பூசை செய்வதில்லை. சமஸ்கிருத மந்திரமும் சொல்வதில்லை.
கதிர்காம முருகன் கோவிலில் பார்ப்பண ஜயர் பூசை செய்வதில்லை. அங்கும் சமஸ்கிருத மந்திரம் சொல்வதில்லை.
நல்லூர் முருகன் கோவிலில் மட்டும் எப்படி பார்ப்பண ஜயர் வந்தார்கள்? அவர்கள் ஏன் சமஸ்கிருத மந்திரம் சொல்கிறார்கள்?
தமிழ் கடவுளுக்கு தமிழில் வழிபடுதல்தானே முறை. அப்படித்தானே ஆரம்ப காலங்களில் இருந்திருக்கும். இடையில் வந்த இந்த பார்ப்பண ஜயர்களை விரட்ட முடியாதா?

No comments:

Post a Comment