Sunday, July 29, 2018

•மரண தண்டனையை எதிர்ப்போம்!

•மரண தண்டனையை எதிர்ப்போம்!
மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்தப்போவதகாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
சுமார் 42 வருடங்களின் பின்னர் போதைபொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என 19 பேருக்கு இத் தண்டனை நிறை வேற்றப்படவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
மரணதண்டனை தவறு என்று பல நாடுகள் அதனை கைவிடும் நிலையில் இலங்கை மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்துவது ஆச்சரியம் அளிக்கிறது.
அதைவிட ஆச்சரியம் மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கும் மனிதவுரிமை அமைப்புகள் மௌனம் காப்பது.
இன்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவர்களுக்கு என கொண்டுவரும் இத் தண்டனையை நாளை தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அரசு பயன்படுத்தும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமன்றி இத் தண்டனைக்கு பல அப்பாவிகளும் பலியாகும் ஆபத்தும் இலங்கையில் உள்ளது.
ஏனெனில் சித்திரவதைக்கு பேர் பெற்ற நாடாக இலங்கை தொடர்ந்து உலகில் முதலிடத்தில் உள்ளது.
எனவே சித்திரவதை மூலம் பெறப்படும் வாக்குமூலத்தை வைத்து அப்பாவிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படலாம்.
அதுமட்டுமன்றி, இலங்கையின் சட்ட வலையில் ஒருபோதும் திமிங்கிலங்கள் சிக்குவதில்லை.
கடந்த வருடம் சீனிக்குள் பெருந்தொகையான போதைப்பொருளைக் கடத்தினார் என்று அமைச்சர் ரிசாத் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் அவர் மீது இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
விஜயகலாவை விசாரணைக்கு முன்னரே ராஜினாமா செய்யும்படி வலியுறுத்திய ஜனாதிபதி மைத்திரி அமைச்சர் ரிசாத்தை இதுவரை வலியுறுத்தவில்லை.
இதுதான் போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஜனாதிபதி மைத்திரி கொண்டுள்ள அக்கறையாகும்.
அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் ராணுவ உதவியுடனே போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சாட்டுகிறார்.
ராணுவ பஸ் வண்டியிலேயே போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும் அதை தன்னால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும் என்று துவாரகேஸ்வரன் கூறியிருக்கிறார்.
ஆனால் இதன் மேல் எந்த விசாரணையும் மேற்கொள்ள அக்கறை எடுக்காத ஜனாதிபதி சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்ற அக்கறை எடுக்கிறார்.
எனவே இந்த மனிதவிரோத மரண தண்டனையை அனைவரும் எதிர்க்க வேண்டியது கடமையும் கட்டாயமும் ஆகும்.

No comments:

Post a Comment